For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிர்வாண போட்டோஷூட்.. ரன்வீர் சிங் மீது பாய்ந்தது வழக்கு.. விஷ்ணு விஷாலும் சிக்குவாரா?

  |

  சென்னை: பொதுவெளியில் நிர்வாண போட்டோக்களை ஷேர் செய்த ரன்வீர் சிங்குக்கு எதிராக மும்பை போலீஸார் 2 வழக்குகளை பதிவு செய்து எஃப்.ஐ.ஆரும் போட்டுள்ளனர்.

  இந்நிலையில், ரன்வீர் சிங்கின் நிர்வாண டிரெண்டிங்கை ஃபாலோ செய்கிறேன் என நம்ம ஊர் எஃப்.ஐ.ஆர் நடிகர் விஷ்ணு விஷாலும், நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

  ரன்வீர் சிங்குக்கு எதிராக வழக்குகள் பாய்ந்ததை போலவே விஷ்ணு விஷாலுக்கும் எதிராக வழக்குகள் பாயுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

  விறுவிறுப்பான சூட்டிங்கில் வாரிசு படம்.. எஸ்ஜே சூர்யாவுக்கு என்ன கேரக்டர் தெரியுமா? விறுவிறுப்பான சூட்டிங்கில் வாரிசு படம்.. எஸ்ஜே சூர்யாவுக்கு என்ன கேரக்டர் தெரியுமா?

  அதிகரிக்கும் ஆபாசம்

  அதிகரிக்கும் ஆபாசம்

  இந்திய சினிமாவில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிகமான ஆபாச காட்சிகளும், நிர்வாணக் காட்சிகளும் தலைவிரித்து ஆடுவதாக ஏகப்பட்ட புகார்கள் குவிந்த வண்ணமே உள்ளன. முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களில் கெட்ட வார்த்தை பேசுவது மற்றும் அத்துமீறிய கவர்ச்சி காட்டி நடிப்பதும் அதிகரித்து விட்டது. நடிகைகளை சில இயக்குநர்கள் நிர்வாணமாக நடிக்க வைத்து படத்தை வியாபாரப்படுத்தி வருவதாகவும் புகார்கள் கிளம்பி உள்ளன.

  நிர்வாண டிரெண்டிங்

  நிர்வாண டிரெண்டிங்

  பெண்கள் மட்டும் பிகினி உடைகளை அணிந்தும், டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்தும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை இஷ்டத்துக்கு ஏற்றுவார்கள், நாங்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதா என சமீப காலமாக நிர்வாண போட்டோஷூட்களை நடிகர்களும் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். லைகர் படத்தில் ஆடையே அணியாமல் வெறும் அந்த இடத்தை ரோஜா பூங்கொத்தை வைத்து மறைத்துக் கொண்டு விஜய் தேவரகொண்டா வெளியிட்ட போட்டோக்களை பார்த்து சமந்தா உள்ளிட்ட நடிகைகள் 'வாவ்' போட்டு இருந்தனர்.

  பிறந்தமேனியாக படுத்த ரன்வீர்

  பிறந்தமேனியாக படுத்த ரன்வீர்

  நடிகை தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங், பிறந்த மேனியாக எதையுமே வைத்து எந்த இடத்தையுமே மறைக்காமல் அப்படியே குப்புறப் படுத்தப்படி பேப்பர் மேகஸினுக்காக கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் பதிவிட அது உலகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவி டிரெண்டானது. கூடவே தற்போது ஏழரையும் வந்து விட்டது.

  ரன்வீர் சிங் மீது வழக்கு

  ரன்வீர் சிங் மீது வழக்கு

  பெண் வழக்கறிஞர் ஒருவர் நிர்வாண போட்டோக்களை பொது வெளியில் பதிவிட்டு சட்டத்தை மீறி உள்ளார் ரன்வீர் சிங் என அவர் மீது மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க ரன்வீர் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சினிமா, ஓடிடி என தொடர்ந்து நடிகைகள் மற்றும் நடிகர்கள் நிர்வாணமாக நடிப்பதை ஏதோ போல்டனஸ் என நினைத்துக் கொண்டு தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.

  விஷ்ணு விஷால் சிக்குவாரா

  விஷ்ணு விஷால் சிக்குவாரா

  ரன்வீர் சிங்கின் டிரெண்டிங்கில் தானும் இணைந்து கொள்கிறேன் என படுக்கை அறையில் படு ஆபாசமாக போட்டோக்களை எடுத்து வெளியிட்ட விஷ்ணு விஷாலை தமிழ் சினிமா ரசிகர்கள் கேவலமாக திட்டித் தீர்த்து விட்டனர். ரன்வீர் சிங்கை பார்த்து நடிகைகள் கமெண்ட் போட்டது போல இங்கே யாருமே விஷ்ணு விஷாலின் நிர்வாண போட்டோக்களை சீண்டவே இல்லை. இந்நிலையில், ரன்வீர் சிங்கை போல சிலுக்குவார்பட்டி சிங்கமும் சிக்குமா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

  பெயர் கெட்டுப்போச்சு

  பெயர் கெட்டுப்போச்சு

  ராட்சசன், எஃப்.ஐ. ஆர் என நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வந்த விஷ்ணு விஷால், ஏன் இப்படியொரு காரியத்தை செய்தார் என அவரது ரசிகர்களே அவர் மீது ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனங்களை நாமும் செய்ய வேண்டுமா? கொஞ்சமாவது பொறுப்புணர்வு இருக்க வேண்டாமா? என்றும் விளாசி வருகின்றனர். இனிமேல், விஷ்ணு விஷாலின் படங்களை குடும்பத்தோடு யார் போய் பார்ப்பார்கள் அவரது பெயர் கெட்டுப்போச்சே என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  English summary
  After cases filed against Ranveer Singh now Netizens asked, Did Vishnu Vishal also booked under FIR for his latest naked photos. Recently many actors and actress prey for the naked photoshoot.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X