»   »  பரபர அரசியல் சூழலில் ரஜினி - நக்கீரன் கோபால் சந்திப்பு!

பரபர அரசியல் சூழலில் ரஜினி - நக்கீரன் கோபால் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார் நக்கீரன் கோபால்.

சமீபத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்து இரண்டு முறை பேசினார். அதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

Nakkeeran Gopal meets Rajini

இந்தச் சூழலில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்குச் சென்ற நக்கீரன் கோபால், ரஜினியைச் சந்தித்துப் பேசினார்.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவர், "இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். வேறு ஒன்றுமில்லை," என்றார்.

நக்கீரன் கோபால் 90களின் இறுதி வரை ரஜினிக்காக 'ரஜினி ரசிகன்' என்ற இதழை நடத்தி வந்தார். 1996 தேர்தலின் போது ரஜினிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nakkeeran magazine editor Gopal has met actor Rajini today at his Poes Garden Residence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil