»   »  'பாய்ஸ்' நகுலுடன் ஜோடி போடும் பாலிவுட் 'ஆஞ்சல்'

'பாய்ஸ்' நகுலுடன் ஜோடி போடும் பாலிவுட் 'ஆஞ்சல்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழின் இளம் நடிகர்களில் ஒருவரான நகுலுக்கு, பாலிவுட் ஹீரோயின் ஆஞ்சல் முஞ்சாலுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நகுல். தொடர்ந்து காதலில் விழுந்தேன், வல்லினம், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானார்.

தற்போது நாரதன் மற்றும் அமளி துமளி படங்களில் நடித்து வரும் நகுல், அடுத்து மலையாள இயக்குநர் கோபாலன் மனோஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Nakul Share Screen Space Aanchal Munjal

இந்தப் படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான ராஜேஷ் எழுதுகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் முஞ்சால் நடிக்கவுள்ளார். இந்தியில் ஆராக்ஷன் மற்றும் அமிதாப்புடன் ஆரக்‌ஷான், சன்னி தியோலுடன் ‘காயல் ஒன்ஸ் அகெய்ன்', கரண் ஜோஹரின் ‘வி ஆர் பேமலி' போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நகுலுடன் நடிப்பது மூலம் பாலிவுட்டைத் தொடர்ந்து கோலிவுட்டிலும் ஆஞ்சல் கால் பதிக்கவுள்ளார்.

இதில் நகுலுடன் இணைந்து மேலும் 3 இளம் நடிகர்கள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான பூஜை வருகின்ற மார்ச் 26 ம் தேதி நடைபெறவுள்ளது.

படபூஜையில் இது குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Nakul to Romance Bollywood Actress Aanchal Munjal for his Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil