»   »  கால்நடை மருத்துவராக மாறிய நலன் குமாரசாமி

கால்நடை மருத்துவராக மாறிய நலன் குமாரசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி கால்நடை மருத்துவராக நடிக்கப் போவதக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சூது கவ்வும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. சிறிய இடைவேளைக்குப்பின் இவர் இயக்கத்தில் வெளியான 'காதலும் கடந்து போகும்' படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Nalan Kumarasamy Cameo in Sibiraj Film

இந்நிலையில் சிபிராஜின் புதிய படத்தில் நலன் குமாரசாமி கால்நடை மருத்துவராக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

'போக்கிரி ராஜா' படத்தைத் தொடர்ந்து அறிவழகனின் உதவியாளர் மணி சேயோன் இயக்கும் புதிய படத்தில் சிபிராஜ் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மீன் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதாம். அந்த மீனுக்கு மருத்துவம் பார்க்கும் கால்நடை மருத்துவராக நலன் குமாரசாமி நடிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'சூது கவ்வும்' ஆகிய படங்களில் நலன் குமாரசாமி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஷணம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சிபிராஜ் நடிக்கவிருக்கிறார்.

English summary
Sources Said Director Nalan Kumarasamy Play a Veterinary Doctor in Sibiraj's Yet-Untitled Film.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil