»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை நளினி திங்கள்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார்.

தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை நளினி. டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா படத்தில் அறிமுகமாகி பல முன்னணிகதாநாயகர்களுடன் நடித்தார். பின்னர் நடிகர் ராமராஜனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

(ராமராஜனும் அதிமுகவின் தீவிர தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பியானவர் ராமராஜன்.இப்போதும் அந்தக் கட்சியில் தான் உள்ளார்.)

ராமராஜனை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நளினி விட்டுவிட்டார். சுமார் 10 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்து வந்த நடிகர்ராமராஜன், நளினி வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் பிரிந்தனர். விவாகரத்துக்கு மனுச் செய்தனர்.

இவர்களது வழக்கு சென்னை குடும்ப நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நளினி - ராமராஜனின் இரு குழந்தைகள் பேரிலும் தலா ரூ 10 லட்சமும், நளினி பெயரில்ரூ 7 லட்சமும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தால் மட்டுமே விவாகரத்து அளிக்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார்.

ராமராஜன் நீதிபதி கூறியபடி பணத்தை டெபாசிட் செய்யாத காரணத்தால் இவர்களுக்கு விவாகரத்து வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது.

இதற்கிடையே ராமராஜன், தற்போது நடித்து வரும் சீறி வரும் காளை படம் வெளியானவுடன் பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்வதாகஅறிவித்துள்ளார்.

இந் நிலையில் நளினியும் அதிமுகவில் சேர்ந்துள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் பல நடிகர், நடிகைகளுக்கு பல கட்சிகளும் வலை வீசி வருகின்றன.

Read more about: actress, admk, chennai, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil