»   »  மீண்டும் நடிக்க வருகிறார் 'நல்லெண்ணெய்' சித்ரா!

மீண்டும் நடிக்க வருகிறார் 'நல்லெண்ணெய்' சித்ரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ராஜபார்வை படத்தில் கமல் ஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ஆட்ட கலசம் படத்தின் மூலம் நாயகியானார். அதற்கு பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 300 படங்கள் நடித்த அவர் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமானார்.

Nallennai Chitra is back

அதற்கு பிறகு திருமணமாகி செட்டிலாகி சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

"எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டன. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்," என்று தன் வருகையை அறிவித்துள்ளார் சித்ரா.

English summary
Nallennai fame Chitra has announced his re entry in Cinema after 18 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil