»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பெயர் தமிழ்நாடு திரைப்படஇயக்குநர்கள் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் இயக்குநர்பாரதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பெயர் ஞாயிற்றுக்கிழமை முதல்தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாடு உணர்வோடும், தாய்த் தமிழ் பாசத்தோடு,தோழமையோடும் ஒன்று கூடி இந்த நாளைக் கொண்டாடவேண்டும்.

சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு தமிழ் சரித்திரம்படைத்த நாளைப் போல் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பெயரும்மாற்றப்பட்டு சரித்திரம் படைக்கும் நாள் இது.

தமிழக திரைப்பட இயக்குநர்கள் எல்லாரும் தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும்,தமிழ் மக்களின் வாழ்க்கையையும் கதைகளாக்கி படங்களாக எடுக்கிறோம்.

தமிழ் மக்களின் வியர்வையிலே நாம் குளித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்ரசிகர்களின் பாராட்டுகளைத் தான் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைஇயக்குநர்கள் மறந்து விடக்கூடாது என்றார் பாரதிராஜா.

Please Wait while comments are loading...