»   »  லியாகத்துடன் தொடர்பா? - நமீதா மறுப்பு!

லியாகத்துடன் தொடர்பா? - நமீதா மறுப்பு!

Subscribe to Oneindia Tamil


நூற்றுக்கணக்கான பெண்களை கல்யாணம் செய்து கொள்வதாக மோசடி செய்த லியாகத் அலிகானுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பற்றி லியாகத் அலிகான் வேண்டும் என்றே அவதூறாகக் கூறியுள்ளார் என நடிகை நமீதா கூறியுள்ளார்.

Click here for more images

இணையதளம் மூலம் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டு, அவர்களிடம் உல்லாசமாகவும் இருந்த லியாகத் அலிகான் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார்.

போலீஸாரிடம் லியாகத் கொடுத்த வாக்குமூலத்தில் பலமுறை நடிகைககள் பலருடன் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்திருந்தார் லியாகத் அலிகான். புன்னகை இளவரசி நடிகைக்கு பல லட்சம் கொடுத்து உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும், நமீதா, நக்மா ஆகியோருடனும் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் பரபரப்பு எழுந்தது.

இந்த நிலையில் லியாகத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நமீதா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இப்படிப்பட்ட குற்றவாளிகள் என்னையும், நக்மாவையும் மட்டுமல்ல, எல்லா நடிகைககளையும் தெரியும் என்று சொல்வார்கள். அதற்காக போலீசார் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்த முடியுமா.

என்னையும், நக்மாவையும் நண்பர்கள் என்று சொல்லியுள்ள அந்த குற்றவாளிக்கும், எங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று உறுதி படுத்த வேண்டியது போலீசாரின் கடமையாகும்.
 
இப்படிப்பட்ட செய்திகளால் அதிகம் பாதிக்கப்படுவது நடிகைகளாகிய நாங்கள் தான். இந்த செய்தி வந்ததிலிருந்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதுகுறித்து விசாரித்து போன்கள் வருகின்றன.
 
லியாகத் அலி யாரென்றே எனக்குத் தெரியாது. அப்படியிருக்கையில் அவருக்கும் எனக்கும் எப்படி தொடர்பு இருக்கும். என்னை பற்றி தவறாக செய்தி வரவேண்டும் என்பதற்காக சிலர் செய்த சதியாக கூட இருக்கலாம்.
 
லியாகத் அலிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதை நான் எங்கு வேண்டுமானாலும் வந்து நிரூபிக்க நான் தயார் என்று கூறியுள்ளார் நமீதா.

நக்மா பதில் என்னவோ?

Read more about: actress, cheat, liyakatali, nagma, nameetha
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil