»   »  பாப்ரே இது தான் அரசியலா?: சினிமாவுக்கே திரும்பிய நமீதா

பாப்ரே இது தான் அரசியலா?: சினிமாவுக்கே திரும்பிய நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலுக்கு வந்த நமீதா இந்த பழம் புளிக்கிறது என்று கூறி படத்திற்கே திரும்பியுள்ளாராம்.

குஜராத் மாநிலத்தில் இருந்து வந்து கோலிவுட் படங்களில் நடிப்பவர் நமீதா. நமீதா என்றாலே மச்சான்ஸ்கள் குஷியாகிவிடுவார்கள். அந்த அளவுக்கு தனது அழகு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்தவர்.

இடையில் படங்களில் நடிக்காமல் ஒரு குட்டி பிரேக் எடுத்தார்.

புலிமுருகன்

புலிமுருகன்

குட்டி பிரேக்கிற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நமீதா மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் நடித்தார். அந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்

அரசியல்

பிரதமர் மோடியின் மாநிலத்தவர் என்பதால் நமீதா பாஜகவில் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார்.

அதிமுக

அதிமுக

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என இரண்டு அணியாக உடைந்து கிடக்கிறது. இதில் எந்த பக்கம் சாய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளார் நமீதா.

பிரச்சாரம்

பிரச்சாரம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நமீதாவை களத்தில் இறக்கி பிரசாரம் செய்யவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சினிமா

சினிமா

இது என்னடா நாம் அரசியலுக்கு வந்த வேகத்தில் அதிமுக இரண்டாக உடைந்துவிட்டது என்று வியக்கும் நமீதா அரசியலை ஓரங்கட்டிவிட்டு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.

English summary
According to reports, Namitha has decided to concentrate on movies rather than spending time and energy on politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil