அசீம், விக்ரமன் வேண்டாம்.. ஷிவின் தான் வின் பண்ணனும்.. ஆதரவு குரல் கொடுத்த நமீதா மாரிமுத்து!

சென்னை: விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் ஒருவர் தான் டைட்டில் வெல்ல வேண்டும் என ஏகப்பட்ட போட்டிகளும் ஆதரவுகளும் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஷிவினுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கடந்த சீசனில் முதல் திருநங்கை போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நமீதா மாரிமுத்து குரல் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் முதன் முறையாக திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து உள்ளே நுழைந்தார். ஆனால், ஒரு வாரம் முடிவதற்கு முன்னதாகவே அவர் வாக்கவுட் செய்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஷிவினுக்கு ஆதரவாக நமீதா மாரிமுத்து குரல் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டார்ச் பியரர் ஷிவின்

டார்ச் பியரர் ஷிவின்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட திருநங்கை ஷிவின் தொடர்ந்து தனது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியாளராக மாறி உள்ளார். சில வாரங்கள் முதல் நபராக சேவ் ஆகி வந்த ஷிவினுக்கும் இந்த சீசனில் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விக்ரமனுக்கு விசிக ஆதரவு

விக்ரமனுக்கு விசிக ஆதரவு

பிக் பாஸ் சீசன் 4ஐ போலவே இந்த சீசனில் ஆரியை போல விக்ரமனும் பாலாவை போல அசீமும் செயல்பட்டு வருவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. அரசியல்வாதியான விக்ரமனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இன்று அதிகாரப்பூர்வமாக ட்வீட் போட்டு தனது ஆதரவாளர்கள் விக்ரமனுக்கு ஓட்டுப் போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அசீமுக்கும் சப்போர்ட் இருக்கு

அசீமுக்கும் சப்போர்ட் இருக்கு

அதே போல மக்கள் நாயகன் என்கிற ஹாஷ்டேக்கை போட்டுக் கொண்டு அசீமை எப்படியாவது டைட்டில் வின்னராக ஆக்கி விட வேண்டும் என அவரது பிஆர் டீம் பெரியளவில் வேலை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சென்ற வாரம் முதல் நபராக திடீரென அசீம் சேவ் ஆன நிலையில், அவருக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என அவரது ஆர்மியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நமீதா மாரிமுத்து சப்போர்ட்

நமீதா மாரிமுத்து சப்போர்ட்

இந்த சீசனில் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை யாரும் ஷிவினை திருநங்கை என பிரித்து ஒரு போதும் பார்க்கவே இல்லை. மக்கள் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரை தனது விளையாட்டால் தனித்து நிற்கும் ஷிவினுக்கு ஆதரவு குறைந்துள்ள நிலையில், கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய நமீதா மாரிமுத்து வீடியோ வெளியிட்டு ஷிவினுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஷிவின் வின் பண்ணனும்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆண் போட்டியாளரும் இரண்டாவது சீசனில் பெண் போட்டியாளரும் டைட்டில் வென்றனர். ஆனால், அதன் பிறகு ஆண் போட்டியாளர்களே தொடர்ந்து வெல்ல தொடங்கினர். இந்நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளரான ஷிவின் வெற்றி பெற்றால் அது பெரும் சாதனையாக பார்க்கப்படும் என நமீதா மாரிமுத்து உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X