பிக்பாஸிலிருந்து பாதியில் வெளியேறினாரா நமீதா மாரிமுத்து?... ஏன் என்னாச்சு?

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களாக 18 பேர் கலந்து கொண்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

Recommended Video

Bigg Boss 5 பற்றி பேசிய Mohan Vaidya | Bagheera Trailer Launch Event

வழக்கமாக பிக்பாஸ் ஓளிபரப்பாகும் இரவு 9.30 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக இந்த சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இரவு 10 மணிக்கு துவங்கி, 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. ஆனால் கமல் வரும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமை எபிசோட்கள் மட்டும் இரவு 9.30 மணிக்கு துவங்கி, இரவு 11 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

கலகலப்பான முதல் வாரம்

கலகலப்பான முதல் வாரம்

போட்டி துவங்கி முதல் 5 நாட்களும் சிறுசிறு உரசல்கள் இருந்தாலும், கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. இமான் அண்ணாச்சி, பிரியங்கா, ராஜு மோகன் போன்றோர் போட்டியாளர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் என்டர்டைன் செய்து வருகிறார்கள். சின்ன பொண்ணு, ஐக்கி, இசைவாணி ஆகியோர் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார்கள்.

முதல் டாஸ்க் இது தான்

முதல் டாஸ்க் இது தான்

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த சீசனில் திருநங்கையான நமீதா மாரிமுத்து, போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். பிக்பாசில் கடந்த 3 நாட்களாக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, சந்தித்த தடைகள் ஆகியவற்றை மனம் திறந்து சொல்ல வேண்டும். அதை கேட்டு அந்த கதை தங்களுக்கு பிடித்திருந்ததா, இல்லையா என லைக், டிஸ்லைக், ஹார்ட் எமோஜிக்கள் கொடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

ஹார்ட்டை அள்ளிய நமீதா

ஹார்ட்டை அள்ளிய நமீதா

இதுவரை தங்களின் கதைகளை சொன்ன போட்டியாளர்களில் நமீதா மட்டுமே அதிகபட்சமாக 17 ஹார்ட் எமோஜிக்களை பெற்றார். நமீதாவின் குரல் ஒட்டுமொத்த திருநங்கைகளில் குரலாக ஒலித்தது. இது ஹவுஸ்மேட்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்தது. திருநங்கைகள் மீது இரக்கப்பட வேண்டாம். படிப்பை மட்டும் கொடுங்கள் என நமீதா கேட்டது, அனைவரின் ஆதரவையும் பெற்று தந்தது.

ஆச்சரியப்பட வைத்த நமீதா

ஆச்சரியப்பட வைத்த நமீதா

நமீதாவின் கதையை கேட்ட பிறகு அனைவருக்கும் அவரை பிடித்து போய் விட்டது. தாமரை செல்வியிடம் அவர் கடுமையாக பேசி விட்டு, பிறகு யாருக்கும் தெரியாமல், அனைவரும் தூங்கும் சமயத்தில், தூங்கிக் கொண்டிருக்கும் தாமரையை எழுப்பி, நான் உங்களை மன்னித்து விட்டேன். டீ போட்டு தரவா என கேட்டது...என்ன கேரக்டர்ப்பா இவர் என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதனால் அனைவரின் ஆதரவையும் போட்டியாளராக இருந்து, கடைசி வரை நமீதா டஃப் கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்க்க துவங்கினர்.

நமீதாவை எங்கே காணோம்

நமீதாவை எங்கே காணோம்

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. இன்று கமல் வரும் எபிசோடிற்கான ப்ரோமோவில் கூட 17 போட்டியாளர்கள் மட்டுமே பிளாஸ்மா டிவி முன் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் நமீதா மாரிமுத்துவை காணோம். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கவலையில் ரசிகர்கள்

கவலையில் ரசிகர்கள்

என்னாச்சு நமீதாவிற்கு, ஒரே வாரத்திலேயே அவர் வெளியேற என்ன காரணம் என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் மருத்துவ காரணங்களுக்காக தான் நமீதா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. வைல்ட் கார்டு ரவுண்டில் நமீதா மீண்டும் வீட்டிற்குள் வருவாரா என பலர் கேட்க துவங்கி விட்டனர். பெரும்பாலான ரசிகர்கள் அவர் பாதியிலேயே வெளியேறியதற்கு கவலை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X