»   »  திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை! - நடிகை நமீதா

திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை! - நடிகை நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை நமீதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 45 படங்கள் வரை நடித்துள்ள நமீதா, ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

முதல் முறையாக பொட்டு படத்தில் அகோரியாக நடிக்கிறார். இதில் பரத், இனியா, மனிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர், ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிக்கின்றனர்.

மாறுதலுக்கு பேய்ப் படம்

மாறுதலுக்கு பேய்ப் படம்

வி.சி.வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நமீதா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 13 வருடங்களாக என்னை மச்சான்கள் கவர்ச்சியாக பார்த்து விட்டார்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டால் சலிப்பு ஏற்பட்டு, சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும் அல்லவா? அதுமாதிரி ஒரு மாறுதலுக்கு, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிட்டது.

கறுப்பு நமீதா

கறுப்பு நமீதா

அதை ‘பொட்டு' படத்திலிருந்து தொடங்குகிறேன். இந்த படத்துக்காக நான் கருப்பு நிறத்துக்கு மாறுகிறேன். இதற்காக துபாய் சென்று, ‘மேக்கப்' மூலம் உடல் நிற மாற்றம் செய்து கொள்கிறேன்.

3 மாதங்கள் வரை என் தோலின் நிறம் கருப்பாகவே இருக்கும். அதன்பிறகு பழைய நிறம் வந்து விடும்.

சுருட்டுதான் கஷ்டம்

சுருட்டுதான் கஷ்டம்

படத்தில், நான் அடிக்கடி சுருட்டு பிடிப்பது போல் காட்சிகள் வருகின்றன. அதற்குத்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. சுருட்டு எனக்கு ரொம்பவே அலர்ஜி.

ரசிகர்கள் காதலே போதும்

ரசிகர்கள் காதலே போதும்

நான் தினமும் ‘டுவிட்டர்' மூலம் மச்சான்களுடன் கலந்துரையாடுகிறேன். நிறைய பேர் என்னை காதலிப்பதாக கூறுகிறார்கள். அவர்களின் காதலே போதும்.

வேணாம் கல்யாணம்

வேணாம் கல்யாணம்

கல்யாணம் எனக்கு தேவையில்லை என்று கருதுகிறேன். வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

இன்னும் 8 கிலோ

இன்னும் 8 கிலோ

அதற்காகவே 96 கிலோ எடையில் மிக குண்டாக இருந்த நான், கஷ்டப்பட்டு 73 கிலோவாக குறைந்தேன். இன்னும் 8 கிலோ குறைக்கப் போகிறேன்.

பேய்க்கு பயப்பட மாட்டேன்

பேய்க்கு பயப்பட மாட்டேன்

இயல்பாகவே நான் துணிச்சல் மிகுந்த பெண். பேய்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும், மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்,'' என்றார்.

English summary
Actress Namitha says that she never thinks about marriage and wants to remain an actress ever.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil