»   »  ஓவியா ஓகே, எங்க ஆளு எங்கடா?: மச்சான்ஸ் கவலை

ஓவியா ஓகே, எங்க ஆளு எங்கடா?: மச்சான்ஸ் கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் அன்று நமீதா வராதது மச்சான்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஓவியாவை பார்த்ததும் பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

 ஓவியா

ஓவியா

ஓவியாவும், ஜூலியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டனர். ஓவியா பிற போட்டியாளர்களிடம் நலம் விசாரித்தார். பார்வையாளர்களுடனும் பேசினார்.

நமீதா

நமீதா

பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் நமீதா, ஸ்ரீயை தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர். அனைவரும் கமலுடன் சேர்ந்து மேடையில் நடனமாடி மகிழ்ந்தனர்.

மச்சான்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நமீதா வருவார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். நமீதா எங்கடா என்று கேட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்.

ஸ்ரீ

ஸ்ரீ

பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசரமாக வெளியே சென்ற ஸ்ரீ ஏனோ நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

English summary
Namitha has skipped Bigg Boss grand finale held on saturday night. Her fans are disappointed after not seeing her there on the stage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil