»   »  வைரலாகப் பரவும் நமீதா கல்யாணப் பத்திரிக்கை!

வைரலாகப் பரவும் நமீதா கல்யாணப் பத்திரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'மச்சான்ஸ்...' எனக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வைக்கு வந்தவர் நடிகை நமீதா. கிளாமராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் அவருக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லை.

கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்தவர் குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமீதா. 'எங்கள் அண்ணா', 'ஏய்', 'பில்லா', 'அழகிய தமிழ்மகன்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Namitha wedding invitation

சமீபத்தில் இவர் தனக்கும் வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர்களது திருமணப் பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Namitha wedding invitation

திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 22-ம் தேதி மாலை வரவேற்பும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற இருக்கிறதாம்.

English summary
Actress Namitha announced her marriage with Virandra Choudhary on november 24. Their marriage invitation is now viral on social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil