twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடிகளை குவித்த சிவகார்த்திகேயன்.. வசூலை அள்ளிய நம்ம வீட்டு பிள்ளை.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்!

    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    |

    Recommended Video

    NAMMA VEETU PILLAI FDFS PUBLIC REVIEW | SIVAKARTHIKEYAN | PANDIRAJ | AISHWARYA | FILMIBEAT TAMIL

    சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி உள்ளார்.

    இந்த படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, யோகி பாபு, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் படத்தை தயாரித்துள்ளார்.

    தளபதி 64: பட பூஜையுடன் தொடங்கியது - காலேஜ் புரொபசராக நடிக்கும் விஜய்தளபதி 64: பட பூஜையுடன் தொடங்கியது - காலேஜ் புரொபசராக நடிக்கும் விஜய்

    என்ன

    என்ன

    படத்திற்கு கடந்த வாரத்தில் இருந்து மிகவும் நன்றாக விமர்சனம் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் வசூல் ரீதியாக 40 கோடி ரூபாய் பெற்றுள்ளது. அதேபோல் வியாபார ரீதியாக சாட்டிலைட் உரிமை 10 கோடி ரூபாய், இந்தி உரிமை 2 கோடி ரூபாய், தியேட்டர் விற்பனை 30 கோடி ரூபாய் செய்துள்ளது.

    எவ்வளவு பணம்

    எவ்வளவு பணம்

    இதில் தியேட்டர் வருமானத்தில் ஷேராக 20 கோடி ரூபாய் சென்றுவிடும். அதேபோல் மற்ற ஷேர்களுக்கு விளம்பரம் உட்பட 10 கோடி ரூபாய் சென்றுவிடும். ஆகவே 30 கோடி ரூபாய் செலவாக சென்றுவிடும். ஆகவே மொத்த வசூல் 52 கோடி ரூபாய் ஆகும்.

    என்ன பட்ஜெட்

    என்ன பட்ஜெட்

    இதில் பட்ஜெட் என்று பார்த்தால் 30 கோடி ரூபாய். ஆகவே இந்த படம் இப்போது வரை 22 கோடி ரூபாய் வரை லாபம் பார்த்து இருக்கிறது. இது நேரடியாக தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபம் ஆகும். அதாவது தியேட்டர் உரிமையாளர்கள், டிஸ்டிரிபியூட்டர்கள் போக நேரடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இவ்வளவு லாபம் கிடைத்துள்ளது.

    தொடக்கம் இல்லை

    தொடக்கம் இல்லை

    இந்த படத்தின் தொடக்கம் சரியாக அமையவில்லை. இல்லையென்றால் இன்னும் அதிகமாக வசூல் பெற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. படத்திற்கு தாமதமாகத்தான் நல்ல ரிவ்யூ வந்தது. அதனால் லேட்டாக படம் வசூல் செய்ய துவங்கியது.

    ஏன் குறையும்

    ஏன் குறையும்

    அதே சமயம் இந்த படத்தின் வசூல் வரும் நாட்களில் குறையும் என்கிறார்கள். ஜோக்கர் படத்தால் தற்போது படத்தின் வசூல் கொஞ்சம் அடி வாங்கி உள்ளது. அதன்பின் அசுரன் மற்றும் ஜல்லிக்கட்டு வெளியாவதால், நம்ம வீட்டு பிள்ளை வசூல் மேலும் குறையும் என்கிறார்கள்.

    English summary
    Namma Veetu Pillai got huge collection after gets a good review in Box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X