மக்களுக்காக 25 கோடியில் மருத்துவமனை கட்டும் பாலகிருஷ்ணா
ஐதராபாத் : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தெலுங்கில் பிரபலமான நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகனான பாலகிருஷ்ணா 14 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.
1980 கள் துவங்கி கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில், பல்வேறு ரோல்களில் நடித்து தனக்கென் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். எம்எல்ஏ, எம்பி., என பல பதவிகளில் இருந்து அரசியலிலும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் பாலகிருஷ்ணா.

சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணா
இருந்தாலும் பாலகிருஷ்ணா பொது இடங்களில் ரசிகர்களிடம் கோபமாக நடந்து கொள்வது, கட்சி தொண்டரை அடிப்பது போன்ற செய்திகள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. அவரது படங்களை விட இது போன்ற சர்ச்சையான விஷயங்களாலும் பாலகிருஷ்ணா எல்லோருக்கும் தெரிந்த பிரபலமாக இருந்து வருகிறார்.

இரட்டை ரோலில் பாலகிருஷ்ணா
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த அகண்டா படம் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனது. தியேட்டர், ஓடிடி என அனைத்திலும் ரசிகர்களின் மிகப் பெரிய ஆதரவை பெற்றது. இதைத் தொடர்ந்து கோபிசந்த் மலினேனி இயக்கும் புதிய படம் ஒன்றில் பிஸியாக நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த படத்தில் அப்பா - மகன் என இரு ரோல்களில் பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

ஜெய் பாலய்யா ஷுட்டிங்
இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாம். இதற்காக கோடை காலம் முடிந்ததும் பாலகிருஷ்ணா, அமெரிக்கா செல்ல உள்ளாராம். அதற்கு முன் இந்தியாவில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடிக்க போகிறார்களாம். இந்த படத்தில் லீட் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் மிக முக்கியமான ரோலில் நடிக்கிறார். ஜெய் பாலய்யா என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அட இதெல்லாம் செய்கிறாரா
படத்தில் பிஸியாக இருந்தாலும் வெளியில் தெரியாமல் பாலகிருஷ்ணா சமூகம் சார்ந்த பணிகளை நிறைய செய்து வருகிறார். தற்போது மக்கள் பயன்பாட்டிற்காக டயாலிசிஸ் சென்டர் ஒன்றை 25 கோடி செலவில் கட்டி வருகிறார். ஏற்கனவே புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை ஒன்றை இந்திய - அமெரிக்க உதவியுடன் அமைத்து நடத்தி வருகிறார் பாலகிருஷ்ணா.


Click it and Unblock the Notifications











