பீஸ்ட் வீரராகவனை கூப்பிடுங்க.. தூங்குற குழந்தையை அடித்து எழுப்பும் பாலகிருஷ்ணா.. ரசிகர்கள் விளாசல்!

சென்னை: என்.டி. ராமாராவின் மகனும் நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா உறங்கும் குழந்தை ஒன்றை தட்டி எழுப்பும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ஹெலிகாப்டரை கயிற்றில் கட்டி இழுப்பது, ஏரோபிளேனில் சென்று குதிரையை சேஸ் செய்வது என ஏகப்பட்ட நம்ப முடியாத ஸ்டன்ட் காட்சிகளை தனது படங்களில் வைத்து ரசிகர்களின் மூளைகளை சுழல வைத்தவர் பாலகிருஷ்ணா.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அகண்டா திரைப்படம் செம மாஸாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது அப்பா படத்திலேயே சிறு வயது முதல் நடித்து வந்த நிலையில், டோலிவுட்டில் இவரும் மிகப்பெரிய நடிகராக இன்றளவும் நீடித்து வருகிறார். பாலகிருஷ்ணா படங்களுக்கு என்றே டோலிவுட்டில் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரோலுக்காகவே படங்கள்

ட்ரோலுக்காகவே படங்கள்

சில படங்களில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டி ரசிகர்கள் ட்ரோல் செய்வது வழக்கம். ஆனால், வருங்காலத்தில் இப்படியெல்லாம் ட்ரோல் செய்வார்கள் என முன் கூட்டியே காலப் பயணம் செய்து அதற்காகவே ஏகப்பட்ட படங்களை எடுத்திருக்கிறார் பாலகிருஷ்ணா என்று தற்போதைய நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஹிட் அடித்த அகண்டா

ஹிட் அடித்த அகண்டா

61 வயதாகும் பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான அகண்டா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸில் ஏகப்பட்ட கலெக்‌ஷன்களை அள்ளியது. இயக்குநர் போயாப்பதி ஸ்ரீனுவின் இயக்கம் மற்றும் தமனின் தாறுமாறான பிஜிஎம் இசையும் அகண்டா படத்தின் வெற்றிக்கு வெகுவாக கைகொடுத்தது.

குழந்தையை அடித்த பாலகிருஷ்ணா

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் குழந்தை ஒன்று அவரது தந்தையின் தோள் மீது தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அதனை அடித்து எழுப்பி போஸ் கொடுக்க பாலகிருஷ்ணா மிரட்டும் வீடியோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் விளாசல்

ரசிகர்கள் விளாசல்

தூங்குற குழந்தையை இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக அடித்து எழுப்புகிறாரே, என்ன மனுஷன் இவரு என நெட்டிசன்கள் பலரும் பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கண்டித்து அவரை விளாசி வருகின்றனர். மேலும், சிலர், பாலகிருஷ்ணா குழந்தையை அடித்து எழுப்பும் வீடியோவை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

பீஸ்ட் விஜய்யை கூப்பிடுங்க

பீஸ்ட் விஜய்யை கூப்பிடுங்க

குழந்தை அழும் சத்தம் கேட்டாலே பீஸ்ட் படத்தில் வீரராகவனாக நடித்த விஜய் தான் ரசிகர்களுக்கு நியாபகத்து வருகிறார். வீரராகவனை கூப்பிடுங்க, பாலகிருஷ்ணா கொஞ்சம் டீலிங் பண்ணனும்னு நெட்டிசன்கள் ஏகப்பட்ட மீம்களையும் போட்டு பங்கம் செய்து வருகின்றனர். பாலகிருஷ்ணாவின் இயல்பே இப்படித்தான் அதிரடியாக இருக்கும், அவர் ஒன்றும் அந்த குழந்தையை கொடுமை கொடுக்கவில்லை சும்மா தட்டித் தான் எழுப்பினார் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X