பாக்யலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட் இது தானா... காரணம் சொல்றேன்னு கதையை சொல்லிட்டீங்களே...
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ப்ரைம் டைமான இரவு 8.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. குடும்ப தலைவியான பாக்கியலட்சுமியை மையமாக வைத்தே கதை நகர்கிறது.
பாக்கியலட்சுமி தம்பதிக்கு செழியன், எழில், இனியா என்ற மூன்று வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். செழியன், ஜெனியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். இந்நிலையில் கணவன் தன்னை தொடர்ந்து அவமதிப்பதால், தனக்கென அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்து மசாலா தொழிலை துவங்குகிறார் பாக்கியலட்சுமி.
ஆனால் பாக்கியலட்சுமியின் கணவர் கோபியோ, மனைவிக்கு தெரியாமல் அவரது தோழியுடன் பழகி வருகிறார். பாக்கியலட்சுமி, ராதிகா இருவரையும் ஏமாற்றி வரும் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி எப்போது மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பை கிளப்பி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த சீரியல்.

ஜெனிஃபருக்கு பதில் ரேஷ்மா
இந்நிலையில் திடீரென இந்த சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்த நந்திதா ஜெனிஃபர் விலகி உள்ளார். அவருக்கு பதில் ரேஷ்மா, ராதிகாவாக என்ட்ரி கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாந்தமான முகத்துடன் ராதிகாவாக வரும் ஜெனிஃபரை மிஸ் செய்வதாக பலர் கூறி வருகின்றனர்.

காரணம் சொன்ன ஜெனிஃபர்
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கு என்ன காரணம் என கணவருடன் இணைந்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஜெனிஃபர். அதில், தான் விலகியதற்கு 2 முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

இது தான் காரணமா
ஒன்று, தனது பர்சனல் விஷயத்திற்காக விலகியதாகவும், அந்த நல்ல விஷயம் பற்றி மற்றொரு வீடியோவில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இன்னொரு காரணம், சீரியலின் கதைக்களம் விரைவில் மாறப் போகிறதாம்.
Recommended Video

ஆஹா...இப்படி ஒன்னு இருக்கா
அதில் பாசிடிவ்வாக இருக்கும் ராதிகா கேரக்டர் நெகட்டிவாக மாற போகிறதாம். இதுவரை நல்ல பெயர் எடுத்து விட்டு, நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க தான் விரும்பாததால் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும், நெகடிவ் ரோல் தனது கேரியரை கெடுத்து விடும் என தான் கருதுவதாகவும் கூறி உள்ளார்.

பாக்யலட்சுமிக்கு வில்லியா
இதனால் இதுவரை நாயகியை மட்டும் வைத்து நகர்ந்த கதையில், புதிதாக வில்லி கேரக்டர் வர போவது, அதுவும் தோழியாக இருந்த ராதிகா, பாக்கியலட்சுமிக்கு வில்லியாக மாறப் போகிறார் என்பது ஜெனிஃபரில் பேட்டியில் இருந்து தெரிகிறது. சீரியலில் இருந்து அவர் விலகி காரணத்தை சொல்ல போய், சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்டை போட்டு உடைத்து விட்டார்.


Click it and Unblock the Notifications











