»   »  நந்தினியின் டார்ச்சராலேயே கார்த்திக் தற்கொலை செய்தார்: அக்கா ரம்யா

நந்தினியின் டார்ச்சராலேயே கார்த்திக் தற்கொலை செய்தார்: அக்கா ரம்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் தம்பி தற்கொலை செய்து கொண்டதற்கு நடிகை நந்தினி கொடுத்த டார்ச்சரே காரணம் என்று கார்த்திக் அக்கா ரம்யா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரம்யா

ரம்யா

விவாகரத்து கேட்டு நந்தினி கொடுத்த டார்ச்சரை தாங்க முடியாமல் தான் தனது தம்பி தற்கொலை செய்து கொண்டதாக கார்த்திக்கின் அக்கா ரம்யா தெரிவித்துள்ளார்.

நந்தினி

நந்தினி

கார்த்திக் இறந்த பிறகு கடைசியாக அவர் முகத்தை பார்க்கக் கூட நந்தினி வரவில்லை என கார்த்திக்கின் தாய் சாந்தி கூறியுள்ளார். நந்தினியால் தான் கார்த்திக் இந்த முடிவை எடுத்ததாக அவரும் கூறுகிறார்.

கார்த்திக்

கார்த்திக்

கார்த்திக்கிற்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கார்த்திக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இல்லை

இல்லை

கார்த்திக் தற்கொலை செய்ய நானோ, என் தந்தையோ காரணம் இல்லை என்கிறார் நந்தினி. தற்கொலை செய்யும் முன்பு கார்த்திக் எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karthik's sister Ramya said that actress Nandhini tortured her brother to give divorce and that forced him to end his life.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos