»   »  நந்தினி சீரியல் நடிகைக்கு ஆபாச போட்டோ அனுப்பிய வாலிபர் 'இவர்' தான்

நந்தினி சீரியல் நடிகைக்கு ஆபாச போட்டோ அனுப்பிய வாலிபர் 'இவர்' தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நந்தினி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நித்யா ராமுக்கு வாலிபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

கன்னட நடிகை ரச்சிதா ராமின் சகோதரி நித்யா ராம். நந்தினி தொலைக்காட்சி தொடரில் கங்காவாக நடித்து வருகிறார். அவரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நித்யா ராமுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டுள்ளது.

ரசிகர்

ரசிகர்

ரசிகர் என்று சொல்லிக் கொண்டு ஃபேஸ்புக்கில் அறிமுகமான கவுதம் என்ற வாலிபர் நித்யா ராமுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.

நித்யா ராம்

நித்யா ராம்

தனக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி எரிச்சலூட்டிய கவுதமை ஃபேஸ்புக் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் நித்யா ராம். என் ரசிகர் என்று சொல்லிக் கொண்டு இந்த நபர் எனக்கு தொல்லை கொடுத்தார் என்று போஸ்ட் போட்டுள்ளார் நித்யா.

அம்மா

அம்மா

ஒரு பெண்ணுக்கு ஆபாச புகைப்படம் அனுப்புவது சரி என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் அம்மாவாகட்டும், சகோதரியாகட்டும் எந்த பெண்களையும் மதிக்கதாவர் என்று தெரிகிறது என்கிறார் நித்யா ராம்.

போஸ்ட்

போஸ்ட்

ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டு தப்பிக்க முடியாது என்பதை அவருக்கு புரிய வைக்கவே இந்த போஸ்ட் போட்டுள்ளேன். இவரை போன்றவர்கள் பாடம் கற்றுக் கொண்டு நாங்கள் பிரபலங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரபலம் என்பதை தாண்டி நான் ஒரு பெண், எனக்கு கவுரவம் உள்ளது என ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் நித்யா ராம்.

English summary
Nithya Ram, sister of actress Rachita Ram, has been pestered by an offender who sent obscene images to her on Facebook. An angered Nithya Ram has retorted to the offender very strongly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil