»   »  மெகா தொடர் நந்தினி கதை விவகாரம்... வேல் முருகன் வழக்கு ஏற்பு... சுந்தர் சிக்கு நோட்டீசு!

மெகா தொடர் நந்தினி கதை விவகாரம்... வேல் முருகன் வழக்கு ஏற்பு... சுந்தர் சிக்கு நோட்டீசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நந்தினி மெகா தொடர் கதைத் திருட்டு குறித்து இயக்குநர் வேல் முருகன் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் சுந்தர் சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெகா தொடர் நந்தினி. இதனை இயக்குநர் சுந்தர் சி தயாரித்துள்ளார்.

Nandhini story case: HC orders to issue notice to Sundar C

இந்தக் கதை தன்னுடையது என்றும், கதைக்கு பணம் தருவதாகக் கூறிப் பெற்றுக் கொண்ட சுந்தர் சி, பின்னர் பணம் தராமல், தன் பெயரையும் குறிப்பிடாமல் மோசடி செய்துவிட்டதாக இயக்குநரும் நடிகருமான வேல் முருகன் குற்றம்சாட்டினார். மேலும் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு சுந்தர் சிக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய வேல் முருகன், "நீதிமன்றம் என் வழக்கை ஏற்றுக் கொண்டு, சுந்தர் சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் என் பக்கம் நியாயம் உள்ளது. ஆதாரம் உள்ளது. அனைத்தையும் நான் நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்," என்றார்.

English summary
The Madras High Court has ordered to issue notice to Director Sundar C in Nandhini story theft case

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil