»   »  இரண்டாவது கணவரை விவாகரத்து செய்கிறார் நடிகை நந்திதா தாஸ்!

இரண்டாவது கணவரை விவாகரத்து செய்கிறார் நடிகை நந்திதா தாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தி, தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகை நந்திதா தாஸ் தன் இரண்டாவது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை போன்ற தமிழ்ப் படங்களிலும், பல இந்திப் படங்களிலும் நடித்தவர் நந்திதா தாஸ்.

Nandhitha Das to divorce her husband

நந்திதா தாசுக்கும், சவுமியா சென் என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2007-ம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

அதன் பிறகு, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவுக்கும், நந்திதா தாசுக்கும் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் விகான் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நந்திதா தாசுக்கும், அவருடைய கணவர் சுபோத் மஸ்காராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நந்திதா தாஸ் கூறும்போது, 'எனது கணவரை விவாகரத்து செய்ய நான் திட்டமிட்டுள்ளேன். இருவரும் கலந்து பேசி, பிரிந்து விடுவது என்று ஒருமனதாக முடிவு எடுத்து இருக்கிறோம்," என்று கூறியுள்ளார்.

English summary
Actress Nandhitha Das has announced her divorce with second husband.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil