»   »  சமந்தா கணவருக்கு ஒன்னு.. "சிங்கர்" சின்மயிக்கு மூனு!

சமந்தா கணவருக்கு ஒன்னு.. "சிங்கர்" சின்மயிக்கு மூனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : தெலுங்கு மொழித் திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது அளிக்கப்படுகிறது. 2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்துள்ளது.

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சமந்தா, நாக சைதன்யா இருவரும் நடித்த 'மனம்' திரைப்படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. 2014-ல் வெளியான இந்தப் படத்திற்காக, சமந்தாவின் கணவரும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதினைப் பெறுகிறார்.

Nandi award for chinmayi and chitra

இந்தப் படத்தில் நடிகை சமந்தாவுக்கு டப்பிங் பேசிய பாடகி சின்மயிக்கு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்கான நந்தி விருது 2014 அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்த அனூப் ரூபன்ஸுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது 2014 கிடைத்திருக்கிறது.

மேலும், பாடகி சின்மயிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான இரண்டு நந்து விருதுகளும் கிடைத்திருக்கின்றன. இந்தத் தகவலை ட்விட்டரில் மகிழ்ச்சியோடு பகிர்ந்த அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

சிறந்த பின்னணி பாடகருக்கான நந்தி விருது 2014 'லெஜண்ட்' படத்திற்காக பாடகர் விஜய் ஜேசுதாஸுக்கும், சிறந்த பிண்ணனிப் பாடகிக்கான விருது
'முகுந்தா' படத்திற்காக சின்னக்குயில் கே.எஸ்.சித்ர்ராவுக்கும் கிடைத்திருக்கிறது.

English summary
Recently married Naga Chaitanya have won Nandi award for 'Manam' movie. Nandi Award for Best Dabbing Artist has been announced for the singer Chinmayi who has spoken dubbing to Samantha in the film 'Manam'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil