»   »  குட்டி ரேவதி படத்தில் சமுத்திரகனியுடன் ஜோடி சேரப் போகும் "அழகி" யார்?

குட்டி ரேவதி படத்தில் சமுத்திரகனியுடன் ஜோடி சேரப் போகும் "அழகி" யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுத்திரக்கனி தயாரிக்கப் போகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நந்திதா தாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் உறுதியில்லை வெறும் வதந்திதானாம்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் அழகி நந்திதா தாஸ் என்று கூறப்பட்ட நிலையில் எந்த தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று நந்திதாதாஸ் கூறியுள்ளார்.

நடிகரும், டைக்டருமான சமுத்திரக்கனி தற்போது ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார். குட்டி ரேவதி இயக்கும் இந்தப் படத்தின் ஹீரேவாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

தற்போது சமுத்திரக்கனி 'வடசென்னை' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக தாமிரா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்கள் முடிந்த பின் அவர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஹீரோ சமுத்திரகனி

ஹீரோ சமுத்திரகனி

இயக்குநர் சமுத்திரகனி, சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமானார். சாட்டை படத்தில் ஹீரோவாக நடித்த அவர், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் அப்பாவாக நடித்தார்.

அழகி நந்திதா தாஸ்

அழகி நந்திதா தாஸ்

அழகி தனலட்சுமியை அவ்வளவு சீக்கிரம் திரைப்பட ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அழகி தனலட்சுமி கதாபாத்திரத்தில் அவ்வளவு அற்புதமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா தாஸ்.

நீர் பறவை

நீர் பறவை

மணிரத்னம் இயக்கத்தில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திலும், சுமதி ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘விஷ்வ துளசி' படத்திலும், கடைசியாக 2012ல் வெளிவந்த ‘நீர்ப்பறவை' படத்திலும் நடித்திருந்தார்.

மீண்டும் தமிழ் படத்தில் அழகி

மீண்டும் தமிழ் படத்தில் அழகி

குட்டி ரேவதி இயக்குனராக அறிமுகமாக உள்ள படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் படத்தில் நந்திதா தாஸ் நாயகியாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. சமுத்திரக்கனியுடன் ஜோடி சேர உள்ள நாயகியின் கதாபாத்திரம் பேசப்படும் என்கிறார் இந்தப்படத்தின் இயக்குநர் குட்டி ரேவதி.

பெண்களின் சிரமங்கள்

பெண்களின் சிரமங்கள்

தமிழ்க் குடும்பங்களில் தங்களது குடும்பத்தாராலேயே சிரமத்திற்குள்ளாகும் பெண்களைப் பற்றிய படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் இயக்குநர் குட்டி ரேவதி கூறியுள்ளார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

தற்போது சமுத்திரக்கனி 'வடசென்னை' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக தாமிரா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்கள் முடிந்த பின் அவர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நந்திதாதாஸ் மறுப்பு

நந்திதாதாஸ் மறுப்பு

அதே நேரத்தில் மகனுடன் கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ள நந்திதாதாஸ் தான் இதுவரை வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்க இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

சினிமா இயக்குவதில் ஆர்வம்

சினிமா இயக்குவதில் ஆர்வம்

சமீபகாலமாக அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதுடன் இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். கடந்த 2008ம் ஆண்டு ‘ஃபிராக்' படத்தை இந்தி, உருது, குஜராத்தி ஆகிய 3 மொழிகளில் இயக்கினார். தற்போது ஆஸ்திரேலியா படம் ஒன்றை இயக்குகிறார்.

சினிமா இயக்க ஆர்வம்

சினிமா இயக்க ஆர்வம்

படம் இயக்குவதில்தான் இப்போது அதிக கவனம் செலுத்துகிறேன். இயக்குவதற்கான வாய்ப்பு ஏதாவது வந்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன். ‘சாத் ஹசன் மான்டோ'என்ற படம் இயக்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

சீரியலில் நடிக்கவும் அழைப்பு

சீரியலில் நடிக்கவும் அழைப்பு

ஹாலிவுட், பாலிவுட், டிவி சீரியல்களில் நடிக்கவும் நந்திதாவிற்கு அழைப்பு வருகிறதாம். ஆனால் நடிப்பில் எனக்கு ஆர்வம் இல்லை. நடிக்க அழைக்காதீர்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தமிழில் குட்டி ரேவதி படத்தில் நந்திதாஸ் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Nandita was rumoured to be signed on for lyricist-turned-filmmaker Kutti Revathi’s maiden directorial venture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil