»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

"பயர்" படத்தின் மூலம் இந்தியாவைக் கலக்கிய நந்திதா தாஸ், இதோ தமிழுக்கும் வந்து விட்டார்.

அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா? சாட்சாத் மணிரத்னம் படத்தில்தான்.

"ஆக்ஸ்" பட டப்பிங்கிற்காக மும்பையிலிருந்து சென்னைக்குப் பறந்து வந்த நந்திதா தாஸ், சப்தமில்லாமல் மணிரத்னத்தைச் சென்று சந்தித்திருக்கிறார்.அவருடைய அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டுத்தான் மும்பைக்கு பிளைட் ஏறினார்.

தபு, ஐஸ்வர்யாராய், மனிஷா கொய்ராலா என்று மும்பை நாயகிகளை அள்ளிக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் கொட்டிய மணிரத்னம், நந்திதா தாஸையும் இழுத்துவந்து விட்டார்.

மணிரத்னத்தின் முன் நடிக்கவிருக்கும் மணியான அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறாராம் நந்திதா தாஸ். நல்ல வலுவான ஒரு கேரக்டரைத் தனக்குமணிரத்னம் தந்திருப்பதாகச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறார் இவர்.

படம் ஒன்றும் காதல் படம் இல்லையாம். ஆனாலும் ஹீரோ யார்? ஆஹா......... மாதவன்தான்!

ஐ.ஏ.என்.எஸ்.

Please Wait while comments are loading...