»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் தனது மிக இயல்பான நடிப்பின் மூலம் தமிழர்களின் இதயங்களைக் கொள்ளைகொண்ட நந்திதா தாசுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் தீவிர ஆர்வம் கொண்ட நந்திதா மும்பை விளம்பர ஏஜென்சியில் பணிபுரியும்செளமியா சென் என்வரைக் காதலித்து வந்தார்.

இந் நிலையில் நடிகர் அமீர் கான், ராகுல் கண்ணா ஆகியோருடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார் நந்திதா.

இந்தக் கிசுகிசுக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் நேற்று அவருக்கும் செளமியா சென்னுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.டெல்லியில் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சினிமா பிரமுகர்கள் யாருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பயர் படத்தில் அறிமுகமான இந்த கருப்பு அழகி, சபானா ஆஸ்மியுடன் சேர்ந்து சூடான காட்சிகளில் நடித்து பரபரப்பைஏற்படுத்தினார் என்பது நினைவுகூறத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil