வெளியே தலை காட்ட முடியல - வைஷ்ணவி குற்றச்சாட்டுகளுக்கு மனைவியோடு விளக்கமளித்த நாஞ்சில் விஜயன்!

சென்னை: "வெளியே தலை காட்ட முடியல" என்று நாஞ்சில் விஜயன் கூறிய இந்த வார்த்தைகள், சமீபத்தில் அவர் கடந்து வந்த மன உளைச்சலை வெளிப்படுத்துகிறது. திருநங்கை வைஷ்ணவி என்பவர், நாஞ்சில் விஜயன் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு நாஞ்சில் விஜயன் அளித்த விளக்கம் பலரையும் உலுக்கியது.

வைஷ்ணவி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த நாஞ்சில், வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது கடந்து போகலாம் என்று நினைத்ததாகக் கூறினார். ஆனால், தொடர்ந்து விமர்சனங்கள் வந்ததால், தற்போது விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Nanjil Vijayan Responds To Vaishnavi s Allegations

சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் தன்னை பற்றி தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும், இதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டியிருப்பதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.

முன்னதாக யூடியூப் சேனலில் உதவி இயக்குனராகவும், வெப் சீரிஸில் நடித்தும் இருக்கிறார் வைஷ்ணவி. திறமையான பெண் என்று பாராட்டிய நாஞ்சில், ஒரு கட்டத்தில் வைஷ்ணவி தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், ஆனால் தனக்கு அதில் விருப்பமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், தனக்கு வைஷ்ணவி திருமணம் செய்து வைத்ததாகவும், மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நாஞ்சில் மறுப்பு தெரிவித்தார். ஆதாரங்கள் இருந்தால் காட்டும்படி சவால் விடுத்தார். தன்னுடைய மனைவி மற்றும் மாமியாரை தேவையில்லாமல் பேசியது மன வருத்தம் அளித்ததாகவும் கூறினார்.

திருநங்கை என்பதற்காக வைஷ்ணவியை ஒதுக்கவில்லை என்றும், அவர் வாழ்க்கையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் நாஞ்சில் கூறினார். மேலும், அவருடைய மனதை புண்படுத்தியிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் சந்தோஷமான வாழ்க்கையை கருத்தில் கொண்டு, இதோடு இந்த பிரச்சனையை விட்டுவிடுமாறு நாஞ்சில் விஜயன் கேட்டுக்கொண்டார். இது வெறும் பப்ளிசிட்டிக்காக பண்ணக்கூடிய ஃபைட் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இறுதியாக, தம் மனைவியின் நம்பிக்கையை பற்றி பேசிய நாஞ்சில், அவர் தன்னை புரிந்து கொண்டிருப்பதாகவும், எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறி முடித்தார். நாஞ்சில் விஜயனையும் என்னையும் சந்தோஷமாக வாழ விடமாட்டியா என அவரது மனைவியும் இந்த வீடியோவில் பேசினார். மேலும், தனது கணவர் 3 லட்சம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கா? என்றும் தன்னுடைய கணவர் தான் பலருக்கு காசு கொடுத்து ஏமாந்து போனவர் என்றும் சப்போர்ட் செய்து பேசியுள்ளார்.

வட்டிக்கு காசு கொடுக்கும் வைஷ்ணவி எந்தவொரு ஆதாரமும் இல்லாமலா எனக்கு காசு கொடுத்தார், அவர் பேசுவதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுத்தது ஏன் என்றும் அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X