Just In
- 29 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 43 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 49 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? சிஎஸ்கே மட்டுமில்லை.. மற்ற அணிகளும் ஏலம் கேட்க தயக்கம்.. பரபர தகவல்!
- Lifestyle
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- News
அது பாட்டுக்கு போகுது.. பெருமாளை கும்பிட வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருப்பதியில்..!
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Actor napoleon: ஹாலிவுட்டில் "மாவீரன்" நெப்போலியன்.. கிறிஸ்துமஸ் கூப்பன்!
மெக்சிகன்: கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், நடிகர் நெப்போலியன் நடிப்பில் கிறிஸ்துமஸ் கூப்பன் என்று ஒரு படம் தயாராகி வருகிறது.
நெப்போலியன் இப்போதெல்லாம் இந்தியாவில் இருப்பதே இல்லை. மகனின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் முகாமிட்டு இருக்கும் இவர், அவ்வப்போது முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே இந்தியா வருகிறார்.
அதுவும் ஏதாவது படம் கமிட் ஆனால் மட்டுமே இந்தியாவுக்கு வந்து இத்தனை ஷெட்யூல் என்று போட்டு, வெகு சீக்கிரத்தில் படத்தை முடித்து கொடுத்துவிட்டு போகிறார். தனது குழுவினர் தான் முன்னெடுத்து இருக்கும் மருத்துவ ஆராய்ச்சியிலும் வெற்றி கண்டு வருவதாக நெப்போலியன் கூறுகிறார்.
Bigg Boss 3 Tamil: பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யா வசிக்க.. வெளியில் தம்பி ராஜேஷ் வைத்யா வாசிக்க!

விளையாட்டு சார்ந்த படங்கள்
அருண் காமராஜ் இயக்கத்தில் பெண்கள் கிரிக்கெட் கிரிக்கட் விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் வெற்றி அடைந்ததில் பலருக்கும் அதன் தாக்கம் உத்வேகத்தை கிளப்பி உள்ளது. இப்போது தளபதி நடித்து அட்லீ இயக்கி வரும் படமும் கால்பந்து விளையாட்டோடு தொடர்பு உடையது. நெப்போலியன் நடிக்கும் கிறிஸ்துமஸ் கூப்பன் படம் ஸ்கேட்டிங் விளையாட்டோடு தொடர்புடையது.

கிறிஸ்துமஸ் கூப்பன்.
கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்'.

மிக நளினமாக
தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்' |நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்' நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமாக படைத்திருக்கின்றனர்.

முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியன்
முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியாளராக தனது பணியைத் துவக்குகிறார். கூடுதல் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில், கிறிஸ்துமஸ் கூப்பன் ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார்.

காதலன் ஆரன்
இந்நிலையில் அவரது பள்ளிப்பருவ காதலன் ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார். காரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப்பருவ காதலன் ஆரன், பிரிவின் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி, பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பின் தாக்கம் என்ன, அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன, காதலர்கள் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதை என்கிறார்கள்..

பள்ளிப் பருவ காதல்
உணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்கும் பள்ளிப்பருவ காதலுக்கும், வாழ்வின் யதார்த்தங்களும், நிதர்சனங்களும் புரிந்த நிலையில் அதனை அணுகும் போதுள்ள வித்தியாசத்தையும் மிகவும் நளினமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டானியல்.

கதாபாத்திரத்தில் நெப்போலியன்
இப்படத்தில் கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோருடன் இணைந்து, ஏஜண்ட் குமார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு டாம் ரோட்ஸ், ட்ரூ ஜாகப்ஸ் ஆகியோரின் உன்னதமான பங்களிப்புடன் சியன் ஆண்டனி கிஷ் இசையமைத்திருக்கிறார்.

வகையில் படப்பிடிப்பு
இத் திரைப்படத்தில் மிச்சிகன் மாகாணத்தின் எழில் கொஞ்சும் ஏரிகள், பச்சை புல்வெளிகள், டெட்ராய்ட் நகரின் நவீன தொழில்துறை மையங்கள், தனித்துவமான நான்கு பருவநிலைகள் என மிகவும் பிரமிப்புடன் ரசிக்கதக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள். கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.