»   »  நம்ம வல்லவராயன் இப்போ சர்வதேச நடிகர்... ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நெப்போலியன்!

நம்ம வல்லவராயன் இப்போ சர்வதேச நடிகர்... ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நெப்போலியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
டெவில்ஸ் நைட்: ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்!- வீடியோ

சென்னை : பாரதிராஜா இயக்கிய 'புது நெல்லு புது நாத்து' படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன், பிறகு படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்தார்.

கிராமத்து கதை மற்றும் கம்பீரமான போலீஸ் ரோல்களில் நடித்து பெயர் பெற்ற நடிகர் நெப்போலியன் பின்னர் அரசியலில் பங்கேற்று மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருபவர், இப்போது ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கிறார். 'டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த நைன் ரூஜ்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நெப்போலியன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

'டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த நைன் ரூஜ்' படத்தில் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக நடிக்கிறார் நெப்போலியன். இந்தப் படத்தில் நெப்போலியன் நடித்திருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

ஆங்கிலம் தெரியாது என்றாலும்

ஆங்கிலம் தெரியாது என்றாலும்

"ஆங்கிலம் பேசத் தெரியாது என மறுத்தும் இயக்குநர் நீங்கள்தான் நடிக்கவேண்டும் என அடம் பிடித்தார். உங்களுக்கு ஓய்வு நேரத்தில் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி நடிக்கவைத்தார்" எனக் கூறியுள்ளார் நெப்போலியன்.

திகில் கதை

திகில் கதை

தொடர் கொலைகள், அமானுஷ்யங்களுடன் கூடிய திகில் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டெல் கணேசன் இப்படத்தை தயாரிக்க, சாம் லோகன் கலேகி இயக்குகிறார்.

ஹாலிவுட் நடிகர்கள்

ஹாலிவுட் நடிகர்கள்

ஜெஸி ஜேன்சன், பாபி லேனென், ஜான் சி.பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பின்னணி பாடகரும், நடிகருமான தேவன் ஏகாம்பரம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

அமானுஷ்ய கதை

அமானுஷ்ய கதை

ஜெஸி ஜேன்சன் அயல்நாட்டு ராணுவப் பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான லேக் ஓரியனுக்கு திரும்புகிறார். அமைதியான அந்தப் பகுதியில் நடக்கும் அமானுஷ்யங்களும், தொடர் கொலைகளும் அவரைப் பாதிக்கிறது.

நைன் ரூஜ்

நைன் ரூஜ்

இந்த அசாதாரண நிகழ்வுகளுக்குக் காரணம் நைன் ரூஜ் எனும் அமானுஷ்ய சக்தி எனவும், இந்த நிகழ்வுகள் அதன் மறுபிறப்பைச் சுட்டிக் காட்டுவதாகவும் உணர்கிறார் விசாரணை அதிகாரி ஃபின்னிக். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம்.

English summary
Napoleon, who debuted in cinema as a villain, gradually grew up and began acting as hero and took a great place in Tamil cinema. He is also acting in other language films and now plays in a movie in Hollywood. In 'Devils Night: Dawn of the Nain Rouge', Napoleon plays an important role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil