For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தன்னம்பிக்கை நாயகன் தனுஷ்.. மகிழ்ச்சிக்கு அளவேதுமில்லை.. நெகிழ்ச்சியில் நெப்போலியன்!

  |

  சென்னை : ''மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்" என்ற குறளுக்கேற்ப நீங்காப்புகழை பெற்றோருக்கு தேடித்தந்து விட்டார் நடிகர் நெப்போலியனின் மூத்தமகன் தனுஷ் நெப்போலியன். அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேதுமில்லை என்று சொல்லி வருகிறார் நெப்போலியன்.

  நெப்போலியன் குழந்தைகளுக்காக, அதுவும் குறிப்பாக மூத்தமகன் தனுஷ்க்காக அவர்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டு அமெரிக்காவில் டெனசி மாகாணத்தில் நேஷ்வில்லில் செட்டிலாகி விட்டார். நேற்று அவரது மூத்தமகன் தனுஷ் பல்கலைகழகத்தின் BA Animation ( Bachelor of Arts ) என்ற 4 ஆண்டு கால படிப்பை முடித்து பட்டமும் வென்றுள்ளார்.

   Napoleon son Dhanush Napoleon-

  கடந்த 10 ஆண்டுகாலமாக அங்கு வந்து அதிக கவனம் செலுத்தி அவனது உடல்நலத்தையும் மனவலிமையையும் பேணிக்காத்ததினால், அங்கு இருக்கும் Sunset Middle School Ravewood High School போன்ற School-களில் பள்ளிப் படிப்பை முடித்து, Lipscomb University என்ற பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகால பட்டப்படிப்பையும் முடித்து கொரோனா என்ற கொடிய நோயினால் ( Covid19 ) உலகெங்கும் அதிக பாதிப்பு உள்ளதால் காணொலி மூலமாக வீட்டிலிருந்தே பட்டம் பெற்றார் என்பது தான் சிறப்பான செய்தி.

  ரெட் ஸோன் ஹாட்ஸ்பாட்.. தர்ஷன் மிஸ் பண்ணிட்டாப்ல.. நடிகையின் போட்டோவை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்!ரெட் ஸோன் ஹாட்ஸ்பாட்.. தர்ஷன் மிஸ் பண்ணிட்டாப்ல.. நடிகையின் போட்டோவை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்!

  எண்ணிய எண்ணமெல்லாம் செயல் வடிவம் கிடைக்க நெப்போலியன் மகனான தனுஷ் அனைத்து திறமைகளையும் காட்டி, 1000 கணக்கான படங்களை வித்தியாசமாக, விதவிதமாக வரைந்து, கடினமாக உழைத்து, Muscular Dystrophy என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட அவரது மிகப்போராட்டமான வாழ்க்கையையும் தாண்டி இறுதியில் சாதித்துக் காட்டிவிட்டார்.

   Napoleon son Dhanush Napoleon

  தான் யார் என்று இவ்உலகிற்கு அவரை அடையாளம் காட்டி அவரது வாழ்வை வென்று காட்டிவிட்டார். இன்னும் பல சாதனைகளைச் செய்திட அவருக்கு ஒரு உந்துதலை தந்திட, வளமுடனும், உடல் நலமுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திட எல்லோருடைய வாழ்த்துக்கள் கிடைத்திட உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச்சொந்தங்களோடு அன்போடு பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் என்று நெப்போலியன் கூறியுள்ளார் .

   Napoleon son Dhanush Napoleon

  என்ன தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தன் நம்பிக்கை தான் ஆணி வேர் . எத்தனயோ குழந்தைகள் குறிப்பாக Muscular Dystrophy போன்ற பிரச்சனை உள்ள குழந்தைகள் நிறையவே கஷ்டப்பட்டு கொண்டு வருகின்றனர். அப்படி பட்ட சூழலில் நடிகர் நெப்போலியன் மகன் செய்து இருக்கும் இந்த சாதனை அவர்களது பெற்றோர் அவருக்குக் கொடுத்த தைரியம் எல்லாம் ஒன்று இணைந்து மேலும் மேலும் வெற்றி பெறுவார் என்று வாழ்த்துவோம்.

  English summary
  Napoleon’s son Dhanush Napoleon has been graduating BA Animation in US university.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X