»   »  சினிமா அடுத்த லெவலுக்குப் போகப்போகுது - கௌதம் மேனன் ட்வீட்

சினிமா அடுத்த லெவலுக்குப் போகப்போகுது - கௌதம் மேனன் ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் அடுத்து இயக்கவிருக்கும் படம் 'நரகாசூரன்'.

இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது நரகாசூரன்.

'மாநகரம்' சந்தீப் கிஷன், அர்விந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

த்ரில்லர் படம் :

த்ரில்லர் படம் :

இந்தப் படமும் 'துருவங்கள் பதினாறு' படத்தைப் போல த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறதாம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

படப்பிடிப்பு தொடக்கம் :

படப்பிடிப்பு தொடக்கம் :

'நரகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் இன்று வெளியிட்டுள்ளார்.

சினிமாவின் அடுத்த கட்டம் :

'நரகாசூரன்' திரைப்படம் தமிழ் சினிமாவை ஒரு படி மேலே கொண்டு செல்லும் அடுத்தகட்டம் என கௌதம் மேனன் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார். தங்களுடன் பணிபுரியும் படக்குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் கௌதம் மேனன்.

என்னை நோக்கிப் பாயும் தோட்டா எங்கய்யா? :

புதிய படத்தின் படப்பிடிப்பு பற்றிய விவரத்தை வெளியிட்டிருக்கும் கௌதம் மேனனிடம், 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லையே என ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.

English summary
Young director Karthick Naren's next venture 'Naragaasooran'. Gautham menon tweeted about this movie by, 'this take cinema next level'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil