கார் கண்ணாடி சைசுக்கு கூலிங்கிளாஸில் நஸ்ரியா க்யூட் போஸ் .. டிஸ்கோ டான்சர் என பாராட்டிய கணவர்!

கொச்சி : நடிகை நஸ்ரியா தெலுங்கில் அன்டி சுந்தரானிக்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார்.

மிக விரைவிலேயே தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கும் நஸ்ரியா கார் கண்ணாடி சைஸுக்கு கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை பார்த்த அவரது கணவர் பகத் பாசில் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில்

குறைந்த பட்ஜெட்டில்

தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பட்டாம்பூச்சி போல சுற்றி திரிந்த நடிகை நஸ்ரியா நசீம் தமிழுக்கு நேரம் மூலம் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான நேரம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை அள்ளிய படங்களின் பட்டியலில் உள்ளது. இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்க நிவின் பாலி ஹீரோவாக நடித்து இருப்பார்.

திருமணம் எனும் நிக்கா

திருமணம் எனும் நிக்கா

முதல் படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை வசியம் செய்த நஸ்ரியாவுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின.

கும்பலங்கி நைட்ஸ்

கும்பலங்கி நைட்ஸ்

திருமணத்திற்கு பிறகு சில காலமாக நடிப்பில் இருந்து சற்று ஓய்வெடுத்து கொண்டு கணவருடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நஸ்ரியா வரதன்,கும்பலங்கி நைட்ஸ், சி யு சூன் என தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் மலையாள சினிமாவில் உள்ளார்.

இதுவரை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டுமே நடித்து வந்த நஸ்ரியா இப்பொழுது தெலுங்கிலும்
அறிமுகமாக உள்ளார். இயக்குனர் விவேக் அத்ரியா இயக்கத்தில் நானி ஹீரோவாக நடிக்கும் அன்டி சுந்தரானிக்கி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

செல்லமாக கலாய்த்து

செல்லமாக கலாய்த்து

நடிப்பில் இரண்டாவது இன்னிங்சை தொடங்க இருக்கும் நஸ்ரியா மீண்டும் ஒரு சுற்று வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க கார் கண்ணாடி சைஸுக்கு செம ஸ்டைலிஷான கூலிங்கிளாஸ் ஒன்றை அணிந்து கொண்டு க்யூட்டான போஸ்களில் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க ஒருபுறம் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த கணவர் பகத் பாசில் டிஸ்கோ டான்சர் என செல்லமாக கலாய்த்து உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X