»   »  மலையாள நடிகர்கள் சீன் போடுவது இல்லை, அவர்களை இயக்குவது ஈஸி: நாசர்

மலையாள நடிகர்கள் சீன் போடுவது இல்லை, அவர்களை இயக்குவது ஈஸி: நாசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள படத்தை இயக்க விரும்புவதாகவும் அங்குள்ள நட்சத்திரங்கள் சீன் போட மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஜுபித் நம்ரதத் இயக்கும் அபாசம் என்னும் மலையாள படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நாசர். தமிழை போன்றே மலையாள திரையுலகிலும் அவர் பிரபலமான நபர்.

சுராஜ், அலென்சியர், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து நாசர் கூறியதாவது,

போலீஸ்

போலீஸ்

நான் கேரளா-தமிழக எல்லையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அதனால் படத்தில் நான் பேசும் மலையாளம் சவுகரியமாக இருக்கிறது.

பேருந்து

பேருந்து

படம் முழுக்க ஓடும் பேருந்தில் நடக்கும். படக்குழு மிகவும் இளமையான குழுவாக உள்ளது. அவர்கள் படத்தை எடுக்கும் விதம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

டேட்ஸ்

டேட்ஸ்

நான் பல மலையாள படங்களில் நடித்திருக்க வேண்டியது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போய்விட்டது. மலையாள படம் இயக்கும் ஆசை உள்ளது.

இயக்கம்

இயக்கம்

மலையாள படத்தை உடனே இயக்க மாட்டேன். ஆனால் இயக்குவேன். கேரளாவின் உணவு, கலாச்சாரம், இலக்கியம், படங்கள் என்று அனைத்தும் எனக்கு பிடிக்கும்.

ஸ்டார்கள்

ஸ்டார்கள்

மலையாள திரையுலகில் அனைவரும் நல்ல நடிகர்கள். அவர்கள் சீன் போடாமல் ப்ரொபஷனலாக நடந்து கொள்கிறார்கள். ஃபஹத் பாசிலாகட்டும், துல்கராகட்டும் ஸ்டார்களாக அல்ல நடிகர்களாக மட்டுமே நடக்கிறார்கள். அதனால் தமிழ் அல்லது தெலுங்கு போன்று இல்லாமல் மலையாள நடிகர்களை வைத்து படம் எடுப்பது வசதி என்று தெரிவித்துள்ளார் நாசர்.

English summary
Nassar is wishing to direct a film in Mollywood. He finds it easy to handle Malayalam actors as they don't throw tantrums.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil