»   »  அனுஷ்கா நான் தத்தெடுத்த மகள்! - நாசர்

அனுஷ்கா நான் தத்தெடுத்த மகள்! - நாசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனுஷ்கா நான் தத்தெடுத்த மகள் என்று நடிகர் நாசர் கூறினார்.

ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘இஞ்சி இடுப்பழகி' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இன்று கலந்து கொண்ட நாசர் கூறுகையில், "நான் இந்த விழாவுக்கு ஒரு நடிகராகவோ, நடிகர் சங்க தலைவராகவோ வரவில்லை. ஒரு அப்பாவாக வந்திருக்கிறேன்.

Nasser adopted Anushka as his daughter

ஆம், நான் அனுஷ்காவை எனது மகளாக தத்தெடுத்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, அனுஷ்கா என்னிடம் வந்து இந்த படத்தின் கதையை சொன்னார். குண்டான வேடத்தில் நடிக்க சில தொழில்நுட்பங்களைhd பயன்படுத்தலாம் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவரோ, தானே சிரத்தை உடல் எடையைக் கூட்டி நடிப்பதாகக் கூறினார். அவர் தொழில் மீது வைத்துள்ள மரியாதை அது.

Nasser adopted Anushka as his daughter

அதுபோல், ஆர்யா எப்போதும் பெண்களுடன் மட்டுமே பேசுவார் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது. அவர் எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவர். அவருடன் நான் 3-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவர் இருந்தால் அந்த படப்பிடிப்பு தளமே மிகவும் கலகலப்பாக இருக்கும்," என்றார்.

English summary
Actor Nasser has attended Inji Iduppazhagi audio launch and says that he has adopted actress Anushka as his daughter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil