»   »  நடிகர் சங்கம் யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை - ராதிகாவுக்கு நாசர் பதில்

நடிகர் சங்கம் யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை - ராதிகாவுக்கு நாசர் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கம் அதன் உறுப்பினர்கள் யாரிடமும் பேதம் பார்க்கவில்லை. எல்லோரும் ஒன்றுதான் என்று ராதிகாவுக்கு பதில் கூறியுள்ளார் நடிகர் சஙகத் தலைவர் நாசர்.

நடிகர் சங்கம் சமீபத்தில் நடத்தி நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தங்களை அழைக்கவில்லை என்று நடிகை ராதிகா சரத்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.

Nasser's reply to Radhika's allegation

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நாசர், நடிகர் சங்கம் அனைவருக்கும் பொதுவானது. நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாரபட்சமின்றி அனைவருக்குமே அழைப்பிதழ், நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

ராதிகா அணியிலிருந்த ராம்கி, நிரோஷாவெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்தார்களே. ஏன், தாமதமாக அழைப்பிதழ் பெற்ற விஜயகுமார் கூட வந்திருந்து வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

இவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பினோம். வரவில்லை.

ஆனால் நாங்கள் பேதம் பார்க்கிறோம், பாரபட்சம் பார்க்கிறோம் என்று மட்டும் குற்றம் சாட்ட வேண்டாம். அது தவறு, என்றார்.

English summary
Nadigar Sangam President Nasser says that he never sidelined any one in the association.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil