»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு காதலியுடன் தலைமறைவான காதல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் திடீரெனதமிழக போலீசாரால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் திடீரென தலைமறைவாகி விட்டார். அவர் மீது பெங்களூர் காவல்நிலையத்தில் நடாஷா என்ற பெண்ணின் தாயார் புகார் கொடுத்தார்.

அதில், கீ போர்டு இசைக் கலைஞரான தனது மகள் நடாாஷாவை ஸ்ரீதர் கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பெங்களூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை போலீஸாரும் இதுதொடர்பாக விசாரித்து வந்தனர்.தொடர்ந்து தலைமறைவாகவே இருந்த இருவரும் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

நாங்கள் காதலர்கள் அல்ல, நல்ல நண்பர்கள், எங்களுக்கு எதிராக சதி நடக்கிறது என்றார் ஸ்ரீதர்.

நடாஷாவோ, எனது தாயார் பணத்துக்கு ஆசைப்பட்டு முதியவர் ஒருவருக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க முயல்கிறார். என்தாயாரால் ஸ்ரீதரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் தான் தலைமறைவானோம். ஸ்ரீதருக்கும் எனக்கும் உள்ள நட்பை உடைக்க என்தாய் முயல்கிறார் என்றார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்குப் பின் இருவரும் மீண்டும் தலைமறைவாயினர்.

இந் நிலையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் ஜோஷ்வா தலைமறைவாக இருப்பதற்கு சென்னை காவல்துறை ஆணையர் நடராஜ்கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோஷ்வா மற்றும் நடாஷா இருவரும் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த ஹோட்டலுக்குச் சென்று இருவரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர்.

இருவரையும் மயிலாப்பூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்ற போலீஸார் அங்கு வைத்து ஜோஷ்வாவிடம் தீவிர விசாரணைநடத்தினர். அதேபோல, மகளிர் காவல் நிலையத்துக்கு நடாஷா அனுப்ப்பபட்டு அவரும் விசாரிக்கப்பட்டார்.

துணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன் முன்னிலையில் ஜோஷ்வாவிடம் விடிய விடிய போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இன்று ஜோஷ்வாவை திடீரென மோசடி வழக்கு ஒன்றில் போலீஸார் கைது செய்தனர். ராணிப்பேட்டையைச் சேர்ந்ததிரைப்படத் தயாப்பாளர் ஹயாத் தனது புதிய படத்தில் இசையமைக்க ஜோஷ்வாவை புக் செய்திருந்தார். இதற்காக இசைக் கருவிகள் வாங்கரூ. 2 லட்சம் பணம் கொடுத்திருந்தார்.

ஆனால் ஜோஷ்வா தலைமறைவாகி விட்டதால் ஹயாத் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், ஜோஷ்வாவை போலீஸார்கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.

கைது செய்யப்பட்ட ஜோஷ்வா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 11ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிபதி மோகன் ராஜ் உத்தரவிட்டார்.

Read more about: chennai joshua mumtaj natasha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil