»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

காதல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரிடம் இருந்து பிரிக்கப்பட்ட நடாஷாவை (வயது 23) போலீசார் அவரது தாயாரிடம்ஒப்படைத்துள்ளனர்.

ஸ்ரீதரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி இரு குழந்தைகளுடன் தனியே வசிக்கிறார்.

இந் நிலையில் தனது இசைக் குழுவில் கீ-போர்ட் வாசித்து வந்த நடாஷாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அவருக்காக கிருஸ்துவமதத்துக்கு மாறிய ஸ்ரீதர், தனது பெயரை ஜோஸ்வா என்று மாற்றிக் கொண்டார்.

நடாஷா அமெரிக்காவில் இசைப் பயிற்சி பெற்றுத் திரும்பியவராவார். இருவருக்கும் இடையிலான காதலை நடாஷாவின் வீட்டில்எதிர்த்தனர்.

இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். தனது மகளை ஸ்ரீதர் கடத்திவிட்டதாக தாயார் புகார் தர பெங்களூர், தமிழக போலீசார்தேடினர். இந்த விவகாரத்தில் முன் ஜாமீன் பெற்று கைதாகாமல் தப்பினார் ஜோஸ்வா.

ஆனால், ஒரு படத்துக்கு இசைமையக்க ஜோஸ்வாவுக்கு ரூ. 2 லட்சம் முன் பணம் தந்துவிட்டு, தலைமறைவானதால் அவரைத் தேடிக்கொண்டிருந்த ஒரு தயாரிப்பாளர் தந்த புகாரை வைத்து பண மோசடி வழக்கு பதிவு செய்த தமிழக போலீசார் ஜோஸ்வாவைக் கைது செய்துசிறையில் அடைத்துள்ளனர்.

அவரிடம் இருந்து பிரிக்கப்பட்ட நடாஷா மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.

இந் நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அரசு வழக்கறிஞர், நடாஷாவை அவரதுதாயாரிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று தெரிவித்தார்.

அப்போது நடாஷாவின் வழக்கறிஞர் பேசுகையில், நடாஷாவை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வைத்து போலீசார் துன்புறுத்திவருகின்றனர் என்றார்.

மேலும் நடாஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு முதியவருக்கு தன்னைத் திருமணம் செய்து வைக்க தனது தாயார் முயல்வதாகவும், இதனால் தானாகவேவீட்டை விட்டு வெளியேறி ஜோஸ்வாவுடன் வந்ததாகவும், அவர் கடத்தவில்லை என்றும் நடாஷா கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்களுக்கு காதல் ஏதும் இல்லை, இருவருமே நல்ல நண்பர்கள் தான் என்றும், இருவரையும் பிரிக்க தாயார் பொய் புகார்கொடுத்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந் நிலையில் அவரை தாயாரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

Read more about: chennai, mother, natasha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil