»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
காதல் பட இசையமைப்பாளரின் தோழி-கம்-காதலி நடாஷாவுக்கு போலீஸார் ரகசிய பாதுகாப்பு அளித்துவருவதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுஉறுப்பினர் பாலபாரதி பேசும்போது, காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வாவின் காதலி நடாஷா, காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, நடாஷா என்ற பெண் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகஉறுப்பினர் பாலபாரதி பேசினார். அது தவறான செய்தியாகும். ஜோஷ்வா கைது செய்யப்பட்ட போது நடாஷாதனியாக இருந்தார்.

இதனால் அவர் ஸ்டெல்லா மேரி இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். உடனடியாக அவரது தாயாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. தற்போது இவர் ஆஷா நிவாஸ் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு போலீஸார் ரகசிய பாதுகாப்பு அளித்துள்ளனர். அவர் பாதுகாப்பாக உள்ளார். நடாஷாவுக்கு எந்தஆபத்தும் இல்லை என்றார் ஜெயலலிதா.

Read more about: chennai, jayalalitha, nadasha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil