»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கும் இசையமைப்பாளர் ஜோஷ்வாவாவுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான உறவும் இல்லை, காதலும்இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் நடாஷா தெரிவித்துள்ளார்.

"காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா விவகாரம் தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள்கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் தங்களது அறையில் வைத்து நடாஷாவிடம் ரகசிய விசாரணை நடத்தினர்.

அப்போது தனக்கும், ஜோஷ்வாவுக்கும் இடையிலான நட்பு குறித்து நடாஷா விளக்கினார். இதுதொடர்பாக அவர்பிரமாணப் பத்திரம் ஒன்றையும் நீதிபதிகளிடம் தாக்கல் செய்துள்ளார்.

அதில், எனக்கும்,ஜோஷ்வாவாவுக்கும் எந்தவிதமான தனிப்பட்ட உறவும் இல்லை, நாங்கள் காதலர்களும் அல்ல.எனது துறையில் முன்னேறுவதே எனது இப்போதைய ஒரே லட்சியம். கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமேஎனக்கு இப்போதைக்கு இல்லை.

சுதந்திரமாகவும், கெளரவமாகவும் வாழ நான் ஆசைப்படுகிறேன். எனது தாயாரின் செயல்பாடுகள் காரணமாகவேஇவ்வளவு குழப்பங்களும் ஏற்பட்டு விட்டன. எனக்கும் ஜோஷ்வாவுக்கும் இடையிலான நட்பை தவறாக அவர்புரிந்து கொண்டு கொச்சைப்படுத்தி, அவசரப்பட்டு போலீஸில் புகார் கொடுத்ததால்தான் இத்தனைபிரச்சினைகளும் ஏற்பட்டு விட்டன.

ஜோஷ்வாவின் இசைக் குழுவில் நான் ஒரு கீ போர்டு வாசிப்பாளர், அவ்வளவுதான். இதைத் தவிர அவருக்கும்,எனக்கும் வேறு எந்த தனிப்பட்ட உறவும் இல்லை. தொழில் ரீதியில்தான் எனக்கும், ஜோஷ்வாவுக்கும் தொடர்புஉள்ளது.

இசைத் துறையில் மிகப் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் நான் உள்ளேன். எனதுதாயாருடன் நான் சென்றால், நிச்சயம் இந்த லட்சியம் பாதிக்கப்படும் என கருதுகிறேன்.

சென்னையில் தற்போது தங்கியுள்ள (அண்ணாநகர், சொரன்டோ கெஸ்ட் ஹவுஸ்) மகளிர் காப்பகத்திலேயேதற்போதைக்கு தங்க விரும்புகிறேன்.

எனவே என்னை சுதந்திரமாகவும், எனது விருப்பப்படியும் வாழ நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். போலீஸ்காவலிலிருந்தும், எனது தாயாரின் பிடியிலிருந்தும் என்னை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றுகூறியுள்ளார் நடாஷா.

முன்னதாக நடாஷாவிடம் சில கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தினர் நீதிபதிகள். நடாஷா சார்பில் மக்கள்சிவில் உரிமைக்கழக வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆஜரானார்.

Read more about: chennai jayalalitha nadasha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil