»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தன்னை பெண்கள் இல்லத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி நடாஷாவுக்கும், அவரது வழக்கறிஞருக்கும்உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா, அவரது இசைக்குழுவில் கீ போர்டு கலைஞராக பணியாற்றிய பெங்களூரை சேர்ந்தநடாஷா என்ற இளம்பெண்ணை கடத்திச் சென்றுவிட்டதாக நடாஷாவின் தாயார் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்துஅவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால், அந்த வழக்கில் ஜோஷ்வா முன்ஜாமீன் பெற்றுவிட்டார்.

இந் நிலையில், ஒரு படத்துக்கு இசையமைக்க முன்பணம் வாங்கிவிட்டு இசையமைத்து தரவில்லை என்று கூறி தயாரிப்பாளர்ஒருவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் ஜோஷ்வாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜோஷ்வாவுடன் இருந்த நடாஷாவை மீட்டு போலீஸார் சென்னையிலுள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில், நடாஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்சுதா ராமலிங்கம் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து நடாஷா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கற்பவிநாயகம் மற்றும் நீதிபதிநாகப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நடாஷா தரப்பில் உத்தரவாத மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஜோஷ்வாவை மட்டுமல்ல, யாரையும் திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. எனது பெற்றோருடன்செல்லவும் எனக்கு விருப்பமில்லை. நான் சுதந்திரமாக இசைப் பணியை தொடர விரும்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை பதிவு செய்து கொண்ட டிவிஷன் பெஞ்ச், நடாஷாவை பெரியார் நகரிலுள்ள பெண்கள் இல்லத்தில் தங்க வைக்கஉத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நடாஷாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதிகள் முன் வந்த நடாஷா, "என்னை பெண்கள் இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளீர்கள். ஆனால் நான் சுதந்திரமாக இசைப் பணியை தொடரவிரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, "இப்படி பேச வைத்தது யார்? இந்த திரைக்கதையை எழுதிக் கொடுத்தது யார்? வழக்கறிஞர் இருக்கும் போது இதுபோல் பேசக்கூடாது என நீதிபதிகள் நடாஷாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், "வழக்கறிஞர்கள் இது போல் பேசச் சொல்லக்கூடாது என அவர் தரப்பு வழக்கறிஞருக்கும் நீதிபதிகள் கண்டனம்தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நடாஷா மீண்டும் பெண்கள் இல்லத்துக்கு சென்றார்.

இதற்கிடையே நடாஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் மனுவில் போலீஸுக்குஎதிராக கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசுவழக்கறிஞர் கோரினார்.

இதை ஏற்ற டிவிஷன் பெஞ்ச், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தது.

Read more about: chennai, tamil, nadasha, jayalalitha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil