»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடாஷாவை போலீஸார் இடையூறு செய்யக்கூடாது. அவர் விருப்பப்படி வாழ்ந்து கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதல் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், நடாஷா வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக ஜோஷ்வா ஸ்ரீதரை போலீஸார் கைது செய்தனர்.

நடாஷாவை போலீஸார் பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்தனர். அவரை சட்ட விரோதமாக காவலில் வைத்திருப்பதாக வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து நடாஷா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார்.

நீதிமன்றத்திற்கு வந்த நடாஷா, தனக்கு 18 வயது ஆகிவிட்டதால் தன்னை விருப்பப்படி வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கற்பக விநாயகம், நாகப்பன் ஆகியோர், நடாஷாவுக்கு 18 வயது ஆகிவிட்டதால் அவர் சுதந்திரமாக வாழலாம்.

மற்றவர்களைப் போல, மனுதாரரும் சுதந்திரமாக, அவருக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ கோர்ட் அனுமதிக்கிறது. அதேசமயம், இசையமைப்பாளர் ஜோஷ்வாவுடன் தனிப்பட்ட முறையில் பழகுவதை மனுதாரர் தவிர்க்க வேண்டும்.

நடாஷாவுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்ற போர்வையில், அவரது சுதந்திரமான செயல்பாடுகளுக்கு போலீஸார் இடையூறாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனிமேல் நடாஷாவின் செயல்பாடுகளில் போலீஸார் தலையிடக் கூடாது. அவரது விருப்பப்படி நடமாட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil