»   »  நடிகையின் விளையாட்டு வினையாகி மருத்துவமனையில் அனுமதி

நடிகையின் விளையாட்டு வினையாகி மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பஞ்சீ ஜம்பிங் செய்த பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அசம்பாவிதம்- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை நடாஷா சுரி பஞ்சீ ஜம்பிங் செய்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அழகிப் பட்டம் வென்ற நடாஷா சுரி படங்கள், வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் பிரபல பிராண்டின் கடை ஒன்றை திறந்து வைக்க இந்தோனேசியா சென்றார்.

கடையை திறந்து வைத்த உடனே அவர் இந்தியா திரும்பவில்லை.

பஞ்சீ ஜம்பிங்

பஞ்சீ ஜம்பிங்

இந்தோனேசியாவில் உள்ள சுற்றுலாத்தலங்களை சுற்றிப் பார்த்தார் நடாஷா. அப்படியே பஞ்சீ ஜம்பிங் செய்துள்ளார். அவர் தலை கீழாக குதித்தபோது அந்த கயிறு அறுந்துவிட்டது.

நடாஷா

நடாஷா

நல்ல வேளை நடாஷா ஆற்றுப்பகுதியில் பஞ்சீ ஜம்பிங் செய்தார். அதனால் கயிறு அறுந்தபோது அவர் ஆற்றில் தலை குப்புற விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடாஷா 24 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நாடு திரும்புவாராம்.

விளையாட்டு

விளையாட்டு

நடாஷா விஷயத்தில் விளையாட்டு வினையாகிவிட்டது. கால்களில் பிளாஸ்டிக் கயிறை கட்டிக் கொண்டு உயரமான இடத்தில் இருந்து குதிப்பது தான் பஞ்சீ ஜம்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Natasha Suri is admitted in a hospital in Indonesia after she met with an accident during Bungee jump.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X