»   »  தலைவர் இல்லாமல் நடக்கிறது, நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது: இளையராஜா கலகல

தலைவர் இல்லாமல் நடக்கிறது, நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது: இளையராஜா கலகல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைவர் இல்லாமல் நடக்கிறது. நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது. நாடு அப்படி போவதால் நாமும் நாட்டோடு போவோம். நம்ம இல்லாமல் நாடு இல்லை என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா கவிக்கோ மன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு அவர் தான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார், அருமையாக பாடினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

தலைமை

தலைமை

ஒரு விழாவுக்கு வந்தால் இளையராஜா தலைமை தாங்குவார் என்ற அறிவிப்பை நான் எதிர்பார்த்தேன். ஒருத்தரும் அறிவிக்கவில்லை. அப்படி எப்படி தான் தலைவர்.

தலைவர்

தலைவர்

தலைவர் இல்லாமல் நடக்கிறது. நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது. நாடு அப்படி போவதால் நாமும் நாட்டோடு போவோம். நம்ம இல்லாமல் நாடு இல்லை. நாம் தான் நாடு.

தலைவன்

தலைவன்

நான் யாருக்கும் தலைவன் அல்ல. இறைவனுக்கு மட்டும் தொண்டன். கவிக்கோ அவர்கள் செய்த சாதனையை இந்த நாட்டில் ஏன் இந்த உலகில் யாரும் செய்தது இல்லை என்று சொல்லலாம்.

எழுத்து

எழுத்து

அவர் அறிமுகமான பின் அவர் எழுதியிருக்கிற அற்புதமான விஷயங்களை படித்தேன். எழுத்தும் எழுத்து உடையாருக்கு என்பேன் நான். உடையார் என்றதுமே வேற உடையாரை நினைக்காதீர்கள்.

கண்ணதாசன்

கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் சொன்னார் கலீல் ஜிப்ரானை படிக்கும்போது எல்லாம் இது போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லையே என்று வருத்தப்பட்டேன். இப்பொழுது அப்துல் ரகுமான் வந்துவிட்டார், என் கவலை தீர்ந்தது என்றார்.

கலைஞர்

கலைஞர்

கலைஞரோ, எனக்கு வெகுமானம் தருவதாக இருந்தால் ரகுமானை தாருங்கள் என்றார். நிஜமகாவே அவரது கவிதையை காதலித்து அந்த வார்த்தையை சொல்லியிருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவரை ஒத்த சிந்தனையுடைய கவிஞர்கள் இந்த உலகில் இல்லை. சத்தியம் சத்தியம் சத்தியம் என்றார்.

English summary
Maestro Ilayaraja said that Kaviko Mandram function is going without a leader, even the nation is like that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil