Just In
- 2 hrs ago
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- 2 hrs ago
ஏன் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி.. வெளியானது கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!
- 3 hrs ago
ரியல் ஹீரோவான மாதவன் மகன்.. நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!
- 3 hrs ago
கமல் ஸ்டைலில் ஆடை பிராண்ட் ஆரம்பித்த பிக்பாஸ் பிரபலம்.. பேர பாத்தீங்களா.. வேற லெவல்!
Don't Miss!
- Finance
பெட்ரோல், டீசல் கார் இனி கிடையாது.. வால்வோ எடுத்த அதிரடி முடிவு.. டார்கெட் 2030..!
- News
அரசு வேலை கேட்டு வந்த... பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கர்நாடக பாஜக அமைச்சர் மீது பரபரப்பு புகார்
- Automobiles
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தேசிய விருது பெற்ற '' பாரம்''.. டிரெய்லர் ரீலிஸ்!
சென்னை : தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த தேசிய விருது விழாவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பாரம். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம் தான் பாரம். இவர் ஒரு இயக்குனர், படத்தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் இவர் இதற்கு முன்பு எடுத்த திரைப்படம் காங்கோ பாய். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவர் அடுத்த இயக்கிய திரைப்படம் தான் பாரம். இது சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றது. ஒரே தமிழ் திரைப்படம் அந்த விழாவில் தேசிய விருதை வென்றது. மற்றும் இப்படம் கோவாவில் நடந்த இந்திய இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் அரங்கேறியது.

இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து மற்றும் படத்தொகுப்பும் செய்துள்ளார் பிரியா கிருஷ்ணசாமி. ஒரு படத்தில் இத்தகைய உழைப்பை முழுமையாக கொடுத்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்று பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இப்படத்ததை இயக்குனர் வெற்றி மாறன் வழங்குகிறார் இதற்கு முன்பு விசாரணை மற்றும் காக்கா முட்டை போன்ற படங்களை வெற்றிமாறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி இது போன்ற ஒரு படத்தை வெளியிட ஒரு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறார். மேலும் இது போன்ற பல படங்கள் திரைக்கு வர வேண்டும் என்பது அவரின் ஆசையும் கூட.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி டிரெண்ட் ஆனது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரை பார்க்கையில் பல பேருக்கு இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. சமூக வலை தளங்களில் இப்படம் ஒரு பேசும் பொருளாகியுள்ளது. மொத்தத்தில் பாரம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரம்.