»   »  நல்லா நடிப்பேன், வாய்ப்பு இருக்கா?: கேட்கிறார் தேசிய விருது பெற்ற நடிகை

நல்லா நடிப்பேன், வாய்ப்பு இருக்கா?: கேட்கிறார் தேசிய விருது பெற்ற நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் மும்பையில் வசிக்கிறேன், நடிக்க வாய்ப்பு இருந்தால் கூறுங்கள் என்று தேசிய விருது பெற்ற நடிகை நீனா குப்தா சமூக வலைதளத்தில் கேட்டுள்ளார்.

பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலம் ஆனவர் நீனா குப்தா(62). மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் தொடர்பில் இருந்து மசாபா என்ற மகளை பெற்றெடுத்தவர்.

National award winning actress asks for work

தற்போது நீனா சி.ஏ. படித்த விவேக் மெஹ்ராவின் மனைவி. 62 வயதானாலும் அரிதாரம் பூசாமல் இருக்க அவரால் முடியவில்லை. அவரை தேடி வாய்ப்புகளும் வரவில்லை.

இதையடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் துணிந்து வாய்ப்பு கேட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

நான் மும்பையில் வசிக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலாக உள்ள நல்ல நடிகை என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை தேசிய விருது பெற்றவர் நீனா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
National award winning actress Neena Gupta took to instagram to ask for acting offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil