Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
National Awards 2022: தேசிய விருது விழாவை அலங்கரித்த கோலிவுட் நட்சத்திரங்கள் யார் யார்ன்னு பாருங்க
டெல்லி: அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
தமிழில் இருந்து 3 திரைப்படங்கள் மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் உட்பட பல விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளன.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நிக்காம பாக்கலாம்.. கமல்ஹாசன் வெளியிட்ட அடுத்த ப்ரமோ!

டெல்லியில் தேசிய விருது விழா
ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில், தமிழில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்று, யோகி பாபு நடித்த மண்டேலா, வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்கள் மொத்தம் 10 விருதுகளை வென்றன.

விருதுகளை வென்ற சூரரைப் போற்று
சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மொத்தமாக 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று' ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு வெளியானது. இப்படத்தில் நடித்த சூர்யா சிறந்த நடிகராகவும், அபர்ணா பலமுரளி சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர். அதேபோல், ஜோதிகா, சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விருதுகளை பெற்றுகொண்டனர். இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் தேசிய விருதுடன் தங்களது மகள், மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதேபோல், ஜிவி பிரகாஷும் 'பருந்தாகுது ஊர்க்குருவி" என்ற கேப்ஷனுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 3 விருதுகள்
பெண்ணடிமைத்தனத்தை பின்னணியாகக் கொண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்கு 3 விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த தமிழ் மொழிப் படம் என்ற விருது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த எடிட்டிங்கிற்காக ஸ்ரீகர் பிரசாத் விருது வென்றார். மேலும், முக்கியமான பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற லக்ஷ்மியும் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். இத்திரைப்படம் நேரடியாக சோனி ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மண்டேலா இயக்குநருக்கு 2 விருதுகள்
அரசியல் நய்யாண்டி பின்னணியில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருந்த 'மண்டேலா' திரைப்படத்துக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன. இப்படத்தின் இயக்குநர் மடோனி அஸ்வின் சிறந்த வசனத்திற்காகவும், சிறந்த அறிமுக இயக்குநருக்காகவும் விருதைப் பெற்றுக்கொண்டார். ஒரேயொரு ஓட்டுக்காக சாதியை மறந்து இருபிரிவினர் அரங்கேற்றும் கூத்துகளை பகடியாக விமர்சித்தது 'மண்டேலா.' இப்படமும் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது, மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் தற்போது சிவகார்த்தியன் நடிக்கும் 'மாவீரன்' படத்தை இயக்கி வருகிறார்.

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து மழை
ஒட்டுமொத்தமாக தமிழில் வெளியான 3 படங்கள் 10 விருதுகளை வென்றுள்ளது, தமிழ்த் திரைத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தமிழ் சினிமாவிற்கு மிகவும் ஆரோக்கியமான விசயம் என, சினிமா ஆர்வலர்களும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் விருதுகளை வென்று மூன்று திரைப்படங்களுமே வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியனாதையும் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.