»   »  'ரேர் பீஸ்' நட்டியின் அடுத்த படம் இதுதான்.. விரைவில் ஷூட்டிங்!

'ரேர் பீஸ்' நட்டியின் அடுத்த படம் இதுதான்.. விரைவில் ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான 'நட்டி' @ நட்ராஜ், அடுத்து 'சில்க்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது.

'சில்க்' படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் என இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இதில் ஹரீஷ் ஏற்கெனவே தமிழில் வெளியான 'ஆ', 'அம்புலி' ஆகிய படங்களை இயக்கியவர். 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

Natraj to act in the film Silk

நட்ராஜ் வித்தியாசமாக கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழகம் முழுக்க மக்களை ஏமாற்றி மோசடி வேலைகளில் ஈடுபட்ட வெவ்வேறு குழுக்களை மையமாக வைத்து வினோத் இயக்கிய 'சதுரங்க வேட்டை' படத்தில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார் நட்டி.

சமீபத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான 'ரிச்சி' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் நட்டி. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்திற்கு 'சில்க்' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரம் ஸ்பெஷலான பட்டுப் புடவைக்கும் அதை ஆன்லைன் டெலிவரி செய்யும் டெலிவரி பாய் நாயகனுக்கும் இடையேயான தொடர்புதான் 'சில்க்' படத்தின் கதையாம். நட்டிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை தேடல் நடைபெற்று வருகிறது. நாயகி தேர்வுக்குப் பிறகு ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Read more about: natraj நட்ராஜ்
English summary
Natraj Natty to act in 'Silk' movie directs by Hari and harish. 'Silk' film is to be filming on kanchipuram backdrop.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X