»   »  நட்டி நட்ராஜை பஞ்ச் வசனம் பேச வைக்கும் பேரரசு!

நட்டி நட்ராஜை பஞ்ச் வசனம் பேச வைக்கும் பேரரசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சதுரங்க வேட்டை மூலம் பரபர நாயகனாகப் பேசப்பட்ட ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் அடுத்து பேரரசுவுடன் கைகோர்த்துள்ளார்.

அதிரடி வசனங்கள், பஞ்ச் வசனங்கள் என தன் பாணியில் படங்களைத் தரும் பேரரசு எழுத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு வாடா மகனே என்று தலைப்பிட்டுள்ளனர்.

Natti - Perarasu join for Vaada Magane

நட்ராஜ் தற்போது ‘போங்கு', ‘எங்கிட்ட மோதாதே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படங்கள் முடிந்ததும் வாடா மகனே படத்தில் நடிக்கிறார் நட்டி.

இந்த படத்தை பேரரசு இயக்கவில்லை. வினோத்குமார் என்பவர் இயக்குகிறார். கவிஞர் பிறைசூடனின் மகன் கே.ஆர்.கவின் இசையமைக்க இருக்கிறார்.

இந்த படத்தில் நட்ராஜுக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவர் நடிப்பார் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் கவின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

English summary
Natraj aka Natti is going to join with Perarasu in Vaada Magane movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil