தீபாவளி போட்டியில் மாஸ் என்ட்ரி கொடுத்த நட்டி நட்ராஜ்.. ‘கம்பி கட்ன கதை’ ரிலீஸ் தேதி இதோ!
சென்னை: சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் அப்படியொரு கதையில் நட்டி நட்ராஜை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு அதே போல ஒரு அல்டிமேட்டான கதையில் காமெடியில் ரகளை செய்யும் முடிவோடு நட்டி நட்ராஜ் நடித்துள்ள கம்பி கட்ன கதை படமும் தில்லாக இந்த தீபாவளிக்கு வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்டி நட்ராஜ், சிங்கம்புலி என மகாராஜா பட கேங் மீண்டும் இணைந்து ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர் படத்தை கொடுக்கப் போவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் ஏற்கனவே பல இளம் நடிகர்கள் படங்கள் போட்டியிட்டு வரும் நிலையில், நட்டி நட்ராஜும் மோதிப் பார்த்துவிடுவோம் என்கிற முடிவுடன் களமிறங்க உள்ளார்.
தீபாவளி ரேஸ் பெருசாகுதே: ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என எந்தவொரு முன்னணி நடிகர்கள் படங்களும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவில்லை. தனுஷின் இட்லி கடை ஆயுத பூஜைக்கு வெளியாகிறது. ஆனால், இளம் நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் டீசல், துருவ் விக்ரமின் பைசன், பிரதீப் ரங்கநாதனின் டூட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி உள்ளிட்ட படங்களுடன் சமுத்திரகனி, கெளதம் மேனன் நடித்துள்ள கார்மேனி செல்வம் உள்ளிட்ட படங்கள் தீபாவளி ரேஸில் ஏற்கனவே உள்ள நிலையில், தற்போது அந்த லிஸ்ட் மேலும், பெரிதாகிறது.
கம்பி கட்ன கதை தீபாவளி ரிலீஸ்: அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கம்பி கட்ன கதை திரைப்படம் வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. மங்காத்தா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தை உத்தரா தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சாமியார் கெட்டப்பில் நட்டி நட்ராஜ் நடித்துள்ள நிலையில், நிச்சயம் ரகளையான சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











