Don't Miss!
- News
பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. 2 துறைதான் பதில் கொடுத்திருக்கு.. ஒத்திவைத்த பசுமை தீர்ப்பாயம்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நவரசா ஆந்தாலஜி படத்தில் சூர்யாவின் பகுதி டைட்டில் இதுதான்.. சூடான தகவல்!
சென்னை : இயக்குனர் மணி ரத்னம் தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட நவரசா ஆந்தாலஜி திரைப்படம் உருவாகி வருகிறது.
இதில் 9 முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து 9 வித்தியாசமான கதைகளை இயக்கி வருகின்றனர்.
நடிகர் சூர்யா , கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்திருக்கும் பகுதியின் டைட்டில் தற்பொழுது கசிந்துள்ளது.
சட்டம்
என்பது
கருத்து
சுதந்திரத்தை
காப்பதற்காக..
அதன்
குரல்வளையை
நெறிப்பதற்காக
அல்ல..
சூர்யா
ட்வீட்

பிளாக்பஸ்டர் ஹிட்
தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஹிட் காம்போக்களில் ஒன்று கௌதம் மேனன், சூர்யா காம்போ. காக்க காக்க வாரணம் ஆயிரம் என இரண்டு படங்களும் இவர்களின் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து சூர்யாவிற்கும் கௌதம் மேனனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கி கொடுத்தது.

9 முன்னணி இயக்குனர்கள்
தற்போது இந்த காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. லாக்டவுன் சமயத்தில் ஆந்தாலஜி படங்களின் வரிசை அதிகரிக்க சென்ற வருடம் அறிவிக்கப்பட்ட நவரசா படத்தை 9 முன்னணி இயக்குனர்கள் 9 வித்தியாசமான கதைகளை கொண்டு இயக்கி வருகின்றனர்.

நீளமான முடியுடன்
கே வி ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம்,கௌதம் வாசுதேவ் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன், ரதிந்தரன் பிரசாத்,அரவிந்த் சாமி ஆகியோர் ஒவ்வொரு பகுதிகளை இயக்கி வருகின்றனர் இதில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்காக நீளமான முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.

கிட்டார் கம்பி மேலே நின்று
ஒவ்வொரு இயக்குனர்களின் பகுதி தலைப்புகளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க இப்பொழுது கெளதம் மேனன் சூர்யா பகுதி டைட்டில் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதாவது சூர்யா நடிக்கும் இந்த பகுதிக்கு "கிட்டார் கம்பி மேலே நின்று" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்
பொதுவாக பழைய படங்களின் பாடல்களில் இருந்து டைட்டில் வைக்கும் வழக்கம் கொண்ட கெளதம் மேனன் இந்த முறை வித்தியாசமாக "கிட்டார் கம்பி மேலே நின்று" என டைட்டில் வைத்துள்ளார். மேலும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிசாசு பட நடிகை ப்ரக்யா நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் நவரசா நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.